உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களை கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக யூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 97 ஆண்டு முதல் 2004 ஆண்டுவரை நடைபெற்றன. இம்மாநாடு 2005 ஆண்டு இடம்பெறவில்லை.