சிங்கப்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Republik Singapura 新加坡共和国 சிங்கப்பூர் குடியரசு |
|
குறிக்கோள்: Majulah Singapura (மலே "சிங்கப்பூர் முன்னோக்கி") |
|
நாட்டு வணக்கம்: மஜுளா சிங்கபுரா | |
தலைநகரம் | சிங்கபூர் 1 |
பெரிய நகரம் | சிங்கப்பூர் 1 |
ஆட்சி மொழி(கள்) | மலே (தேசிய மொழி), ஆங்கிலம், மண்டரின், தமிழ் |
அரசு | பாராளுமன்ற குடியரசு |
- அதிபர் | செல்லப்பன் இராமநாதன் |
- பிரதமர் | லீ எசியஎ லூங் |
விடுதலை | |
- ஒருதலைபட்ச பிரகடனம் (ஐ.இ. இடமிருந்து) | ஆகஸ்டு 31, 1963 |
- அதிகாரப்பூர்வமாக ஐஇ இடமிருந்து( மலேசியாவின் மாநிலமாக) | செப்டம்பர் 16, 1963 |
- மலேசியாவிடமிருந்து | ஆகஸ்டு 9, 1965 |
பரப்பளவு | |
- மொத்தம் | 699 கி.மீ.² (190வது) |
270 சதுர மைல் | |
- நீர் (%) | 1.444 |
மக்கள்தொகை | |
- யூலை 2005 மதிப்பீடு | 4,326,000 (120வது) |
- 2000 கணிப்பீடு | 4,117,700 |
- அடர்த்தி | 6,389/கிமி² (4வது) 16,392/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 மதிப்பீடு |
- மொத்தம் | $123.4 பில்லியன் (57வது) |
- ஆள்வீதம் | $29,900 (22வது) |
ம.வ.சு (2003) | 0.907 (25வது) – உயர் |
நாணயம் | சிங்ப்பூர் டொலர் (SGD ) |
நேர வலயம் | சிசீநே (ஒ.ச.நே.+8) |
- கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+8) |
இணைய குறி | .sg |
தொலைபேசி | +652 |
1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும். 2. 02 மலேசொயாவில் இருந்து அழைக்கும் போது |
சிங்கப்பூர் குடியரசு (சீனம் 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய் Republik Singapura; ஆங்கிலம் The Republic of Singapore), என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாஉ (Riau) தீவுகளும் உள்ளன. சிங்கை தீவின் latitude 1°17'35"N longitude 103°51'20"E .
[தொகு] வரலாறு
சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் அது "துமாசிக்" என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மறைந்த பிறகு, துமாசிக் மற்ற ராஜ்யங்களினால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் சாம்ராஜ்யம், தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய ராஜ்யம் போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய ராஜ்யம் குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுடியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயர் சமஸ்கிருத மொழியில் "சிங்கம் நகர்" என்று பொருட்படும்.
நவீன சிங்கை நகர் 1819 - ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரிட்டன் நாட்டின் colony ஆக சேர்க்கப்பட்டது. பினாங், மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களிக் அட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது. 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று அது 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலே மிகச் செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் பிரதமராக விளங்கிய திரு லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.