சதுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், நேர்கோடுகளாலான சம அளவிலான நான்கு பக்கங்களையும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும்.
[தொகு] அடிப்படை உண்மைகள்
சதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும்.
A, B, C, D என்பவற்றை உச்சிகளாகவும், a, b, c, d களைப் பக்கங்களாகவும் a = b = c = d நீள அலகை பக்க அளவாகவும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பக்கமும் இன்னொரு பக்கத்தின் மேல் செங்குத்தாக உள்ளது. எனவே, நான்கு முனைகளின் (அல்லது உச்சிகளின்) சாய்வும் 90 பாகை அளவாகவும்.
AC, BD ஆகிய எதிர் எதிர் முனைகளை இணைக்கும் கோணல் கோடுகள் இரண்டும் ஈடாக (சமமாக) இருக்கும். AC ஈடு BD. எனவே AC = BD.
ஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும். சுற்றளவு = 4.a. கோணல் கோட்டின் நீளம் √2a
[தொகு] சதுரத்தின் பரப்பைக் கணித்தல்
ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும்.