சுருவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுருவில் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9.65° N 79.8667° E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 5 மீட்டர் |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை | 2500-3000 |
சுருவில் (Suruvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடல்வளமும், நல் மண்வளமும் கொண்டது. இக்கிராமமானது தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு மூவைந்து கிலோமீற்றர் தொலைவிலே உள்ளது. இங்கு ஏறக்குறைய 2500 - 3000 குடிமக்கள் உள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல் அமைவிடம்
- Latitude 9.6500
- Longitude 79.8667
- Altitude (feet) 19
- Lat (DMS) 9° 39'
- 0N Long (DMS) 79° 52'
- 0E Altitude (meters) 5
- Time zone (est) UTC+6DT
- Approximate population for 7 km radius from this point: 24507
தகவல்: World:Sri Lanka:North Eastern Province:Suruvil - Google Maps
[தொகு] பெயரின் தோற்றம்
வளைந்த கிராமம் என்ற படியால் சுரி + வில் = சுருவில் என வந்தது என்பர். " முன்னொரு காலத்தில் பல செல்வந்த வியாபாரிகளின் தாயகமாக செழிப்புற்று இருந்தமையினால், "குட்டி அமெரிக்கா" என்ற குறிப்பெயரும் கொண்டிருந்தது.
[தொகு] வரலாறு
சுருவில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் மிகப் பிரபல்லியமானதொன்றாக விளங்கியது. சுருவில் பதியின் அருகாமையில் கடற்கரைப் பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அயற் தீவுகளான் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, காரைதீவு, மண்டைதீவு போன்ற இடங்களுக்கு முற்காலத்தில் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கு இப்பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகமே பெரிதும் உதவியாக இருந்தது.
[தொகு] பொருளாதாரம்
சுருவில் கடல்வளம் நிறைந்ததொன்றாக விளங்கியமையால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி நூற்றுக்கதிகமான மீனவர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் பலர் கப்பல் ஓட்டிகள். இவர்கள் இந்தியா, மாலைதீவு போன்ற இடங்களில் இருந்து உணவு இறக்குமதியிலும், மக்கள் போக்குவரத்துக்கு உதவியாகவும் முற் காலங்களில் செயற்பட்டார்கள். தற்போதைய நிலவரம் தெரியவில்லை.
சுருவில் மண்வளம் கமச்செய்கைக்கு (Paddy cultivation) மிகவும் உகந்தது. நெல் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. கிராமத்தை சுற்றிக் கற்பகதருச் (பனைமரச்) சோலைகளும், தென்னஞ்சோலைகளும், மாஞ்சோலைகளும் நிறைந்திருக்கின்றன. தோட்டங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் பயிரப்படுகின்றன. கற்பகத்தருவின் மூலப்பொருட்களான ஓலை, மட்டை, நார், பனம்பழம், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் போன்றவற்றைகொண்டு சிறு கைத்தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கிருந்த மக்களின் மற்றுமொரு முக்கிய பொருளாதார மார்க்கம் வியாபாரம் ஆகும். கொழும்பிலும் பிற இடங்களிலும் கடைகள், உற்பத்தி தாபனங்கள் வைத்து பொருள் ஈட்டினர். எனினும், போர் சூழலுக்கு பின்னர் பல வர்த்தகர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர்.
[தொகு] சமூகம்
யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலமை அடுக்கமைவின் கூறுகள் இங்கு உண்டு. குறிப்பாக மீனவ, விவசாய-வியாபார சமூகங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்தாலும், ஒரு இடைவெளி இருக்கின்றது. எனினும், ஒரு அடித்தளமான சமத்துவ அல்லது சமநிலை உணர்வு இங்கு மேலோங்கி இருக்கின்றது எனலாம்.
[தொகு] சமயம்
இங்குள்ள பெரும்பான்மை மக்கள் ஐயனார், அம்மன் ஆகிய குல தெய்வங்களை வழிபடும் இந்துக்கள். இங்கிருக்கும் ஐயப்பன் கோயில், நாக பூசணி அம்மன் கோயில், வைரவ கோயில் ஆகியவை இம் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள், ஐயனார் கோயில் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட, விசாலமான கோயிலாகும்.
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துகேயர் காலனித்துவ ஆட்சியின்]] கீழ் கணிசமான மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள அன்னை மேரி ஆலயம் கத்தோலிக்கரும், இந்துக்களும் வழிபடும் ஒரு தலம் ஆகும்.
இங்கு வாழும் மக்கள் அனேகர் பரம்பரை உறவினர், சினேகர். ஆகையால், இந்து கிறீஸ்தவ வேற்றுமை அல்லது பிரிவினை இல்லை. அதாவது, மதம் காரணமாக பிரச்சினையோ, அல்லது குமுகாய உணர்வில் பாதிப்போ இல்லை.
[தொகு] கல்வி, அரச சேவைகள்
சுருவிலில் ஒரு ஆரம்ப பாடசாலை, 5 ம் வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் உண்டு.
[தொகு] ஈழப் போரும் புலர்ப்பெயர்வும்
[தொகு] எதிர் காலம்
[தொகு] துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.