Wikipedia பேச்சு:சொல் தேர்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொகுப்பு 1 |
தொகுப்பு 2 |
நல்ல தமிழ்ச் சொற்களை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? |
நல்ல தமிழ்ச் சொற்கள் எவை? |
அண்மைய காலங்களில் விஜயராகவன் பல பேச்சுப் பக்கங்களிலும் விக்கி கட்டுரைகளில் சொற் தெரிவு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஜெயபால் போன்றோரும் கருத்து தெரிவித்து உள்ளனர். பல இடங்களில் பயனர் கருத்துக்கள் ஒத்தும் மாறியும் இருந்தாலும், சில அடிப்படை விசயங்கள் திரும்பத் திரும்ப உரையாடி நேரம், உழைப்பை வீணாக்குகிறோமோ என்று தோன்றியதால் ஓர் ஒருங்கிணைந்த உரையாடலுக்கு இங்கு வழி வகுக்கலாம் என்று நினைக்கிறேன். அண்மைய சொற்தெரிவு உரையாடல்கள் அனைத்தும் இங்கு உள்ளன. அவற்றை பார்ப்பது இங்கு கருத்து தெரிவிக்க உதவும். சில அடிப்படை தலைப்புகளை கீழே தருகிறேன். அவரவர் கருத்துக்களை இங்கு குவித்து விட்டால், பின்னர் திரும்பத் திரும்ப உரையாடிக் கொண்டிருக்க வேண்டாம்.:--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] கூகுள் தமிழ் எதிர் விக்கி தமிழ்
கூகுள் தேடலில் ஒரு தமிழ்ச் சொல் இருக்கிறது என்றால் அது சரியான சொல் என்று பொருள் இல்லை. அப்படியும் சிலர் எழுதுகிறார்கள் என்று பொருள். இவை தகுந்த வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்க உதவும். அவ்வளவே. ஆனால், எது சரியான எழுத்துக்கூட்டல், எது நல்ல தமிழ்ச் சொல் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூகுளில் குப்பை என்று தேடினால் கூடத் தான் இருக்கும். அதற்காக நம் வீட்டை குப்பையால் நிரப்பிக் கொள்வது கிடையாது. cocaine, marijuana என்று தேடினாலும் கிடைக்கும். அதற்காக அரசுகள் அவற்றை சட்டப்பூர்வமாக்கி விடாது. வீட்டுக்கு, நாட்டுக்கு எது நல்லது என்று நாம் தேர்ந்து செய்வது போல் தமிழுக்கு எது நல்லது என்று தேர்ந்து செய்ய வேண்டும். விக்கிபீடியா தனி ஒரு கட்டுரையாக, அது மக்களுக்குப் புரிந்தால் போதும் என்று கிட்டப்பார்வையில் பார்க்காமல் அது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் வல்லமையை அறிந்து தொலைநோக்குடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். வெறும் விசயங்களை விளக்குவதற்குத் தான் விக்கிபீடியா என்றால் அதை நான் ஆங்கிலத்திலேயே ஆங்கில விக்கிபீடியாவிலேயே செய்து விட்டுப் போய்விடுவேனே? எதற்கு தமிழில் செய்ய வேண்டும்?--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
நான் (தற்போது) அவ்வப்போது மட்டுமே வந்து செல்வதால் சில அண்மைய உரையாடல்களைப் பார்க்காதிருந்திருக்கலாம். தவறிருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.
கூகிள் ஒரு தேடுபொறி மட்டுமே. அதன் பின்னால் இயங்கும் நிரல்துண்டுகள் அந்த நோக்கத்தில் எழுதப்பட்டவையே. அதனால் அவை ஒரு சொல் ஒரு பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் தாமாகவே தமது சொற்பட்டியலில் சேர்த்துவிடுவதில்லை. அந்த சொல்லின் ஒருவகையான "இன்றியமையாமை" அல்லது "பொருண்மை" இதில் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது.
தவிர, இணையத்தில் புழங்கும் மொழி என்பது பொது வழக்கை ஒத்து அமைந்திருக்க வேண்டுமென்பதில்லை. மேலும், தமிழிலுள்ள இருவடிவத் தன்மையின் (diglossia) விளைவாக கலைக்களஞ்சியம் போன்ற ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழிநடை வெகுவாக மாறுபடுகிறது.
இதைத்தவிர, எது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல் என்பது அவரவர் சுற்றத்தைப் பொருத்து மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக சென்னையில் ஆங்கிலக் கலப்பு கூடுதலாகவும், கடலோரப் பகுதிகளில் போர்த்துகீசக் கலப்பு மிகுதியாகவும் இருக்கலாம். இவை தவிர பல்வேறு வட்டார வழக்குகள் புலம்பெயர்ந்தோர் மொழி வழக்கு என எண்ணற்ற வழக்குகள் உள்ளன.
வேடிக்கையாக ஒருமுறை, என் தாத்தா, பாட்டி, பெரியப்பா, அப்பா ஆகியோர் பேசிக் கொண்டிருந்ததை பதிவு செய்து மீண்டும் கேட்டோம். வியக்கத்தக்க அளவில் அவர்கள் பேச்சில் தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன! இதில் எனது அப்பாவும் பெரியப்பாவும் ஆங்கிலம் கற்று பேரூர்களில் வாழ்பவர்கள். தாத்தாவும் பாட்டியும் ஆங்கிலேயர் காலத்தில் நடுநிலைப் பள்ளி வரை பயின்று ஓரளவு ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். இருந்தும் அவர்கள் இயல்பாகப் பேசும்பொழுது வடமொழி ஆங்கிலமற்ற தமிழ் அதுவும் செயற்கையாக அல்லாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஏனம் போன சொற்கள். இது தனிநபர் வாழ்க்கையில் ஏற்பட்ட உரையாடலாதலால் நான் அழித்து விட்டேன்.
இந்நிலையில் விக்கிபீடியாவைல் வட்டாரக் சார்பின்றி பிறமொழிக் கலப்பின்றி (கூடுமானவரை) எழுத முயல்வது பொருத்தம் என்றே நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 15:19, 19 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] அகராதித் தமிழ் எதிர் விக்கி தமிழ்
அகராதி என்பது ஒரு காலத்தில் புழங்கிய சொற்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடு. அவ்வளவு தான். அது ஒரு மொழிச் சான்றிதழ் இல்லை. அதனால், ஒரு அகராதியில் இருப்பதை எல்லாம் தமிழ்ச்சொல் என்று ஏற்கவும் தேவை இல்லை. இல்லாததை ஒதுக்கவும் தேவை இல்லை. உண்மையில் நல்ல அகராதி என்றால், அது வேர் மொழி குறிப்பிட்டு விளக்கி இருக்க வேண்டும். விக்கி தமிழை பொறுத்த வரை எது நல்ல தமிழ் என்று நம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்ட சொற்களை பயன்படுத்தலாம். இது தொடர்பான உரையாடல்களுக்கு விக்சனரி ஒரு உதவிக் களமாக இருக்கும். --Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] ஊடகத் தமிழ் எதிர் விக்கி தமிழ்
ஊடகங்களுக்கு வணிகக் கட்டாயங்கள், போட்டிக் கட்டாயங்கள், பொறுப்பின்மை தரும் சுதந்திரம் ஆகியவை உண்டு. அவற்றை விக்கியிலும் திணிக்கத் தேவை இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மணிப்பிரவாள நடை இதழ்களை இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது. அப்பொழுது அந்த நடையைப் பின்பற்றி ஒரு விக்கி வந்திருந்தால் இன்று அதன் பலன் என்ன? நிகழ்காலத்துக்கு ஒட்டிய மொழி நடை என்பதை காட்டிலும் எக்காலத்திலும் எந்நாட்டிலும் புரிந்து கொள்ளக்கூடிய பொதுத் தமிழ் நடை ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும்.--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] கிரந்த எழுத்துக்கள் ஏற்றலும் தவிர்த்தலும்
பிற மொழிச் சொற்களை தகுந்து உச்சரிப்பதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தலாம். ஜாதி - சாதி போன்று பரவலாக அறியப்படும் சொற்களில் உச்சரிப்புத் துல்லியத்தை புறக்கணித்து தமிழ் எழுத்து உடைய சொற்களை முன்னிலைப்படுத்தலாம். கிரந்த எழுத்து உள்ளது ஒரு வகையில் இது பிற மொழிச் சொல்லாக இருக்கலாம் என்பதற்கு ஒரு அத்தாட்சி. அந்த இடங்களில் தகுந்த தமிழ் சொல் இருக்கிறது என்று தெரிந்தால் மாற்றி எழுதலாம். --Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] ஆங்கிலப் பெயர் initial கள்
எம். ஜி. ஆர் என்று பரவலாக அறியப்பட்டிருந்தால் அந்த பெயரையே முன்னிலைப்படுத்த வேண்டும். விக்கிபீடியா ஒரு வகையில் வரலாற்று ஆவணம். அவர் எப்படி அறியப்பட்டார் என்பதை துல்லியமாக சொல்வது அவசியம். தவிர, கே. எஸ். ரவிக்குமார் போன்ற பெயர்களில் கே. எஸ் என்பதன் தமிழாக்கம் என்ன என்று துழாவ முடியாது. தவிர, அது தான் அவரது அதிகாரப்பூர்வ பெயரும் கூட. எனவே அதையே பயன்படுத்த வேண்டும். அப்படியே கண்டு பிடித்து முன்னிலைப்படுத்தினாலும் அது நபர்களை குழப்புவதிலும் தேடல் முடிவுகளை குழப்புவதாகவும் அமையும்--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] சொல் சுருக்கம்
சொற்கள், சொற்றொடர்கள் சுருக்கமாக பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] இயற்பியலில் Mass என்பதற்கான சொற்கள்
இயற்பியலில் mass என்பதற்குத் திணிவு, பொருண்மை என்னும் இரு சொற்களும் தருகின்றோம். திணிவு என்பது அடர்த்தி என்னும் சொல்/பொருளோடு குழப்பம் தர வாய்ப்புள்ளது. பொருண்மை என்பது மை என்று விகுதி கொண்டிருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை (பண்பு என்று கொள்ளலாம்தான், எனினும் முழுதும் சரியாக படவில்லை). நிறை என்னும் சொல் சுருக்கமாகவும், மிகவும் பொருத்தமாகவும் உள்ளதால் எல்லா இடங்களிலும் நிறை என்பதை mass என்பதற்கு இணையாகப் பயன் படுத்தலாம். weight என்னும் சொல்லுக்கு நாம் எடை என்பதைப் பயன்படுத்தலாம் (பிற சொற்கள் பளு, பாரம் முதலியவும் உண்டு). நிறை என்பது ஒரு பொருள் நிறைந்திருக்கக் கரணியமான ஒன்று (பொருண்மை) என்னும் பொருள் கொள்ளலாம். நிறைந்திருப்பது நிறை. இது புது விளக்கம் (இயற்பியலுக்காக). உண்மையில், நிறை என்பது நிறுத்தல், தூக்கி நிறுத்தல் (நில் -> நிறு->நிறுத்தல்) என்பதில் இருந்து பெறப்படும் பொருள். ஆகவே அதுவும் எடை என்னும் பொருள்தான் (தொடக்கத்தில்). நிறுத்தல் -> நிறுத்தல் அளவை முதலியனவும் உண்டு. ஆனால் இங்கே இயற்பியலுக்கு நாம் வரையறை செய்து mass என்பதற்கு ஏற்றதாக கொள்ளத்தக்க சொல் நிறை. ஆங்கிலத்திலும், mass என்பது பெரிய என்பது போன்ற பிற பொருள்களில்தான் இருந்தது, அதனை இயற்பியலில், வரையறை செய்து ஆக்கிகொண்டனர். எனவே நிறை என்பதை mass எனப்தற்கு ஆளலாம் என்பது என் பரிந்துரை. பயனர்களின் கருத்தை அறிந்தபின் மாற்றம் செய்ய இருக்கின்றேன். இது அடிப்படையான ஒரு தேவை. அருள்கூர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--செல்வா 13:58, 20 மார்ச் 2007 (UTC)
ஈழத்தில் mass என்பது திணிவு என்றும் weight என்பது நிறை என்றும் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தர வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் விஞ்ஞான (அறிவியல்) பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுவதில்லையா? ஏற்கனவே நெடுங்காலம் பயன்படும் ஒரு கலைச்சொல்லை மாற்றுவது பொருத்தமல்ல. வாசகருக்கு மிகுந்த குழப்பம் ஏற்படும். 90இனைத் தொண்பது என்றும் 900 இனை தொண்ணூறு என்றுமே அழைக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய மாற்றம் சாத்தியமல்ல. ஏனென்றால் அவ்வாறு மாற்றினால் இதுவரை 90 இனைத் தொண்ணூறு என்று எழுதி வந்தவற்றோடு குழப்பம் ஏற்படும். அத்தகைய நிலைதான் இங்கும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொற்களை மாற்ற முனைவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். நன்றி. கோபி 14:24, 20 மார்ச் 2007 (UTC)
-
- திணிவு என்ற சொல் mass என்பதற்கு எனக்கு நன்றாகப் படுகின்றது. அதைப் பரிசீலியுங்கள். திணிக்கலாம் என்பது பொருள் என்ற சொல்லோடு தொடர்பு பெறுகின்றது. அடர்த்தி என்ற சொல்லில் இருந்தும் வேறுபடுகின்றது. --Natkeeran 14:37, 20 மார்ச் 2007 (UTC)
(அத்தோடு கோபி, தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்ற மாற்றம் தேவை. ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு பின்னர் இப்படித்தான் எழுதவேண்டும், அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு-இலங்கை-சிங்கப்பூர் அரசுகள் ஆணை செய்யவேண்டும். --Natkeeran 14:39, 20 மார்ச் 2007 (UTC))
நிறை என்பது பொருத்தம் இல்லை என்பது இராம.கி அவர்களின் கருத்து.
http://valavu.blogspot.com/2006_07_01_archive.html
உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்று தான் நான் சொல்லுவேன். அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது density யைக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?
"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன். |
மேலும் செறிவெண் என்பதைச் சிக்கலெண் என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொற்களைத் தவிர்த்து புதிய சொற்களைப் பயன்படுத்துவது விக்கிபீடியாவின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கும். இது தொடர்பில் பயனர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். கோபி 14:40, 20 மார்ச் 2007 (UTC)
-
- கோபி, அந்தக் கட்டுரையின் பிரதான ஆக்கர் செல்வா. எனவே நீங்கள் கருத்துப் பரிமாற்றத்தின் பின்னரே அதன் இணக்க முடிவுகளுக்கேற்ப செயற்பட்டு இருக்கலாம். இந்த சொல் பற்றி இன்னும் ஒரு தீர்மானம் இல்லை. --Natkeeran 14:47, 20 மார்ச் 2007 (UTC)
-
-
- 18-02-2007, 20-02-2007 ஆகிய இரு தினங்களில் நான் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்ட கருத்துக்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. மேலும் ஈழத்திலும் தமிழகத்திலும் பயன்பாட்டில் உள்ள சொல்லைத் தவிர்த்து விட்டுப் பயன்படுத்தப்படும் புதிய சொல்லொன்றை நகர்த்துவது குற்றமாகவும் எனக்குப் படவில்லை. தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் உரையாடல் போன்ற உரையாடல்களால் பயனேதுமில்லை. விக்கிபீடியா கலைச்சொல் மாற்றஞ் செய்வதற்கான இடமல்ல. கோபி 14:55, 20 மார்ச் 2007 (UTC)
-
-
-
-
- கோபி, கருத்து வேறுபடுகின்றேன். மற்ற இடங்களில் எல்லாம் கூட்டாக அலச முடியாது. எழுதியவர்களின் முடிவு. அவ்வளவுதான். இங்கு உரையாடலாம், பின்னர் மாற்றலாம், பின்னர் மீண்டும் மாற்றலாம். பெரிய வித்தியாசம். தமிழ் விக்கிபீடியா கலைச்சொற்கள் பற்றி அலச தகுந்த இடம். வேறு எங்கு (விக்சனரியும் நன்று) ஒரு சொல்லின் பின்புலத்தை வைத்து, அதன் சிந்தனை புலத்தில் வைத்து ஆய முடியும். வேண்டுமானல் அரசுகள் ஒரு கூட்டு வைத்தாலும், அவை இவ்வாறன ஒரு பொதுவுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு முன்னேற்றம் இருக்காது. எல்லாம் மந்தமாகத்தான் நடக்கும். --Natkeeran 15:02, 20 மார்ச் 2007 (UTC)
-
-
நற்கீரன், திணிவு என்பது எச்சொல்லுக்கு நன்றாகப் படுகிறது? நிறை என்பது எச்சொல்லுக்குப் பொருத்தமில்லை? //ஈழத்தில் mass என்பது திணிவு என்றும் weight என்பது நிறை என்றும் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தர வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது.// என்பதை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழகக் கலைச் சொற்கள் என்ன என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகும். நற்கீரனுக்கு எது நன்றாகப் படுகிறது, இராம கி எதனைப் பிழையாகப் பார்க்கிறார் போன்றன விக்கிபீடியாவைப் பயன்படுத்துவோருக்குப் பொருள் விளங்க நாம் எழுத வேண்டும் என்பதுடன் ஒப்பிடுகையில் ஒரு பொருட்டே இல்லை. கோபி 14:45, 20 மார்ச் 2007 (UTC)
-
- மொழி தனிமனித முடிவுகளின் ஒரு இணக்கமே. பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பதை கணக்கில் வைத்துத்தான் தனிமனிதர்களும் முடிவுகள் எடுப்பார்கள் என்பது இங்கு குறிக்கதக்கது. இலங்கை வழக்கங்கள் எல்லாம் பொருத்தமில்லை. இலங்கையில் இன்னும் பெரும்பாலும் சமஸ்கிருத கலைச் சொற்களை நிறைய கையாளுகின்றார்கள். எ.கா விஞ்ஞானம், ராசாயணம் போன்றவை. --Natkeeran 14:51, 20 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், விக்கிபீடியா யாருக்காக? உங்களுக்கும் எனக்குமா? அல்லது தமிழ்பேசும் அனைவருக்குமா? நீங்களும் நானும் எடுக்கும் முடிவுகளுக்கேற்பத் தமிழில் காலங்காலமாகக் கற்றுவந்த அனைவரும் மாற வேண்டும் என நினைப்பது முட்டாள்த்தனம். கோபி 14:57, 20 மார்ச் 2007 (UTC)
-
- கோபி, கருத்து வேறுபடுகின்றேன். காலங்காலமகக் கற்றுவந்த அனைவரும் சிலசில சந்தர்ப்பங்களில் மாறத்தான் வேண்டும். மாற்றம் தகுந்ததா வேண்டியாதா என்பதுதான் முக்கியம். --Natkeeran 15:07, 20 மார்ச் 2007 (UTC)
-
-
- மாற்றம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. மாற்றுவதற்குப் பொருத்தமான இடம் த.வி இல்லை என்கிறேன். நாம் மாற்றங்கள்ளைச் செய்வது புதிதாக வருபவர்களுக்குப் பங்களிக்க முடியாத நிலையையே ஏற்படுத்து. பயன்பாட்டிலுள்ள விக்கி நடையைப் பின்பற்றுவதுகூடப் பலருக்கும் சிக்கலாயுள்ளது. --கோபி 15:16, 20 மார்ச் 2007 (UTC)
-
-
-
- உங்கள் அக்கறை புரிகின்றது. தகுந்த மாற்றங்களை எங்கு செய்யலாம்? பாடப் புத்தகங்களிலா, அல்லது இதழ்களிலா, அல்லது பத்திரிகைகளிலா. யார் செய்கின்றார்கள்? தகுந்த மாற்றங்கள் எல்லா இடத்திலும் செய்யப்பட வேண்டும். எப்படி எவ்வளவு எவ்வாறு என்பதுதான் கேள்விக்குறி...--Natkeeran 15:49, 20 மார்ச் 2007 (UTC)
-
- இலங்கை வழக்கமொன்று பொருத்தமில்லையெனின் தமிழக வழக்கு எதுவென்பதே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இருக்கும் இரண்டில் எது பொருத்தமென்பதையே பார்க்க வேண்டும். விஞ்ஞானம், இரசாயனம் ஆகியவற்றைத் தவிர்த்து அறிவியல், வேதியியல் என்று பயன்படுத்துவது பொருத்தமானதே. இதுவரை பயன்படாத சொல்லெனின் புத்தாக்கத்தில் ஈடுபடலாம். இருக்கும் சொற்களைப் புறக்கணிப்பது பொருத்தமல்ல. கோபி 15:04, 20 மார்ச் 2007 (UTC)
-
- கோபி, தகுந்த சொல் இருந்தால் யாரு நேரம் எடுத்து சொல் புத்தாக்கம் செய்வார்கள். ஆனால் எல்லா சொற்களையும் தகுந்த சொல் என்று உடனே ஏற்றுக்கொள்ள தேவையில்லை. குறிப்பாக தமிழ் கலைச்சொற்களைப் பொறுத்தவரை. இருப்பினும், பொதுத்தரம் பேணுவது நன்று. --Natkeeran 15:15, 20 மார்ச் 2007 (UTC)
- கோபி, நிறை என்னும் சொல் mass என்பதற்கு பாடநூல்களில் இருந்து அறிவியல் பொது நூல்கள் வரை பல இடங்களில் பயன்பாட்டில் இருக்கின்றது. நான் கூறவந்தது, இங்கே பொதுத்தரம் பேணுவது பற்றி. நான் மாற்றுகின்றேன் என நினைக்க வேண்டாம். மேலும் சில மாற்றங்கள் தேவைப்படும் பொழுது செய்தே ஆக வேண்டும் (கூர்ந்து அறிந்து, பயன் இடர் ஆய்ந்து, செய்தல் வேண்டும்). அண்மையில் பயனர் கலாநிதி overhead எனபதற்கு மேந்தலை என்று ஒரு கட்டுரை இட்டுள்ளார். இது இலங்கையில் பயன்பாட்டில் இருக்கின்றது என நினைக்கின்றேன். இது எத்தனையும் பொருத்தமில்லா literal translation என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். trunk call (முன் காலத்தில் பிற ஊர்களில் இருப்பவருடன் தொலை தொடர்பு கொள்ளப் பயன் படுத்தப்பட்டது) இதனை முண்டக்கூவல் என்று மொழி பெயர்த்திருந்தனர். இவை எத்தனையும் கேலிக்கு இடம் தந்தது என்பதை அறிய வேண்டும். பொருத்தம் இல்லை என்றால் மாற்றும் துணிவு வேண்டும் (நன்றாக ஆய்ந்து பின் கொள்ளல்). ஆங்கிலத்தில் இன்றும்கூட கலைச்சொல் மாற்றங்கள் நிகழ்கின்றன. நிறை-எடை என்பதை நாம் தெளிவாக விளக்கி எழுதினால் எப்படி நம்பகத்தன்மை குறையும்? இன்னும் சொல்லபோனால், இங்கே த.வி-யில் இன்னும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் எழுதப்படும். இதனைப் பார்த்து வருங்காலத்தில் பாடநூல்கள் முதல் அறிவியல் பொது நூல்கள் வரை எழுதக்கூடும். எனவே த.வி-யை குறைவாக மதிப்பிட வேண்டாம். ஏறத்தாழ தரம் நிறுவும் நிலையில் த.வி இயங்கக்கூடும். --செல்வா 14:59, 20 மார்ச் 2007 (UTC)
தரம் நிறுவும் நிலையில் த.வி இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். ஆனால் 15 பேர் பங்களித்துத் தரம் நிறுவுவதென்பது சாத்தியமல்ல. அதிலும் இங்கு பங்களிக்கும் சிலரே துறைசார் அறிஞர்கள். நற்கீரன் நீங்கள் இணையம்தான் உலகம் என்று நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இன்னும் 5 - 10 ஆண்டுகளின் பின்னரேயே சாதாரண தமிழ்க் குழந்தைகளால் விக்கிபீடியா போன்றவற்றை இலகுவில் அணுக முடியும். அதற்கிடையில் சொற் பயன்பாடு பலவிதங்களில் மாறியிருக்கும். அப்போது த.வி பயனற்றதொன்றாக மாறாமலிருக்க வேண்டுமானால் நாளாந்த பாவனையில் உள்ள சொற்களைக் கவனத்தில் எடுப்பதே முக்கியமாகும். த.வி உரையாட நல்ல இடம்தான். ஆனால் எமக்குச் சரியென்று படும்விதத்தில் செய்யப்படும் மாற்றங்கள் த.வியின் பயன்பாட்டையே பாதிக்கும். கோபி 15:10, 20 மார்ச் 2007 (UTC)
-
- கோபி, இலங்கை பாடப் புத்தகங்கள் என்னிடம் உண்டு. அவற்றை சேகரித்து வருகின்றேன். இங்கு நூலகத்தில் பல இந்தியப் புத்தகங்களும் உண்டு. பொதுப் பத்திரிகைளும் படிப்பதுண்டு. த.வி ஒரு இடைத் தர மாணவனை மனத்தில் நிறுத்தியே எழுதப்பட வேண்டும். நாளாந்த பயன்பாட்டில் உள்ள நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தில் வேறுபாடு கிடையாது. --Natkeeran 15:20, 20 மார்ச் 2007 (UTC)
-
- கோபி, யார் இன்று தரம் நிறுவுகின்றார்கள். எப்படி, எத்தனைபேர் கூடி நிறுவுகின்றார்கள் என்று விசாரித்து சொன்னால் நன்று. அவர்களுடன் நாமும் ஒத்துளைக்க முடியும் அல்லவா. --Natkeeran 15:22, 20 மார்ச் 2007 (UTC)
-
-
- நற்கீரன், நீங்கள் நாளாந்தப் பாவனையிலுள்ள சொற்கள் பற்றி அறியாதுள்ளீர்கள் என்ற அர்த்தத்தில் நான் கருத்துக் கூறவில்லை. இங்கே நாம் செய்யும் மாற்றங்கள் மிக மிகப் பொருத்தமானவையாக இருந்தாற்கூட நாளாந்த பாவனை வட்டத்தைச் சென்றடைய வாய்ப்பே இல்லை என்பதே என் கருத்து. ஒரு துறைசார் இதழில் நாம் உரையாடுவோமானால் பலரையும் சென்றடைந்து பலரது கருத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இணையத்தில் அது சாத்தியமில்லை. இணையத்தில் வலைப்பதிவு போன்றவற்றில் ஈடுபடுவோர் ஒட்டுமொத்தத் தமிழ் பேசுவோரை எவ்விதத்திலும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மேலும் ஆழமான அறிவுள்ளோரும் மிகச் சிலரே. கோபி 15:26, 20 மார்ச் 2007 (UTC)
-
-
-
-
- கோபி, அப்படிப்பட்ட துறைசார் இதழ்கள் பற்றி தகவல்களை த.வி வில் சேர்த்தால் நன்று. --Natkeeran 15:39, 20 மார்ச் 2007 (UTC)
-
-
அவ்வாறு தரம் நிறுவும் அமைப்பேதும் தமிழுக்கு இன்னும் இல்லை என்பது கவலைக்குரியது. தஞ்சைப் பல்கலைக்கழகம் அத்தகையதொரு அமைப்பா? தெரியவில்லை. இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகமும் அந்தளவு கவனமெடுத்ததாகத் தெரியவில்லை. பல்லாண்டுகளின் முன் பாடநூலாக்கக் குழுக்கள் சிறப்பாக இயற்கிப் பெருமளவு கலைச்சொல்லாக்கத்தில் இடுபட்டன. இப்போதுள்ளோர் அவற்றைத் தொடர்கின்றனர். அவ்வளவே. இப்போது இலங்கைப் பாடநூல்களில் உள்ள எழுத்து, கருத்துப் பிழைகள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஆதலால் தமிழகத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. எதாவது செய்யத்தான் வேண்டும். எங்கிருந்து தொடங்குவது? கோபி 15:30, 20 மார்ச் 2007 (UTC)
தமிழ் மக்களின் மொழி; அதற்கு தரம் நிறுவும் அமைப்பு தேவையா...தெரியவில்லை. அது எப்படி தொழிற்படும். எனினும் எழுதும் பொழுது கலைச்சொற்களைப் பொறுத்தவரையில் ஒரு பொதுத் தரம் பேணுவது சிறப்பு. குறிப்பாக வளர்ச்சியடைந்த எண்ணக்கருத்துக்கள் நோக்கி. இல்லாவிட்டால் வெறும் அவரவர் அலம்பல்கள்தான் மிஞ்சும். இது தானக நடக்குமா அல்லது நாம் கூட்டாக முயலவேண்டுமா...?--Natkeeran 15:39, 20 மார்ச் 2007 (UTC)
இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு என்று இறுக்கமாக நிற்பதால் விளையும் பெரும் கேட்டை உணர்தல் மிகவேண்டுவது. கலைச்சொற்கள் பாட நூல்களில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்றும் எண்ணிப் பார்க்கவேண்டும். இன்று TVU வில் உள்ள பெரும்பாலான சொற்கள் ஒரு காலத்தில் நானும் என் நண்பர்களும் கிழமை தோறும் கூடி எங்களுக்குத் தெரிந்தவாறு கருத்துரையாடி ஆய்ந்தறிந்து தொகுத்தவை (ஏறக்குறைய 5000 சொற்கள்) (இன்று விரிவு படுத்தியுள்ளார்கள்). அன்று நாங்கள் மாணவர்களாக இருந்து நிகழ்த்தியதை இன்று தகுதி படைத்தவர்கள் (பேராசிரியர்கள், துறை அறிவாளர்கள் முதலானோர்) ~100 பேர் அறிவியல் நோக்கில் கலந்துரையாடினால், நல்ல சொல் தேர்வுகளும், கருத்துரையாக்கத் தேர்வுகளும், திறன் ஆய்வுகளும் செய்யலாம். இருளை இகழ்வதைக் காட்டிலும் ஒரு விளக்கை ஏற்றுவது நல்லது எனும் நோக்கில், நல்லன செய்வதில் கருத்தை செலுத்துவோம். அறிவுத்துறைகளில் இன்றுள்ள தமிழ்க் கலைச்சொற்களை ஏதோ மாற்ற முடியாத, மாற்றக்கூடாத, நிலைப்பெற்றுவிட்ட ஒன்றாக கருதுவது நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். வளர்ச்சி தரும் வழிகளில் சற்று திறந்த மனம் வேண்டும். பழைய கலைச்சொற்களை தேவை எனில் பிறைக்குறிகளுக்குள் தரலாம். --செல்வா 16:12, 20 மார்ச் 2007 (UTC)
முழு உரையாடலைப் படித்தும் யார் எச்சொல்லைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார்கள் என்று குழப்புகிறது :) தமிழ்நாட்டுப் பாடநூல்களில் mass = நிறை weight = எடை என்று நினைக்கிறேன். வீட்டுக்குப் போய் tvu தளத்தைப் பார்த்து சொல்கிறேன் (இதை என்று ஒருங்குறிக்கு மாற்றுவார்கள் !!) இலங்கை வழக்கு குறித்து கோபி சொல்லி விட்டார். திணிவு, பொருண்மை போன்ற சொற்களை இலங்கை வழக்கு, தமிழ் விக்கி மூலமே அறிந்து கொண்டேன். பள்ளி நாட்களில் தமிழ் வழிய நண்பர்களிடம் இருந்து நிறை என்ற சொல்லையே கேட்ட நினைவு. ஏற்கனவே உள்ள சொல்லுக்கு மறுபடியும் செல்வாவின் பரிந்துரை ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை பாடநூல்களில் இலங்கையில் நிறை = weight, தமிழ்நாட்டில் நிறை = mass என்பது தான் குழப்பம் என்று புரிந்து கொள்கிறேன். இது பெருங்குழப்பம் தான். எங்க ஊரில் "எடை நிறுத்துப் போடுப்பா" என்று சொல்லும் வழக்கத்தை நிறை என்ற சொல்லுன் பொருத்திப் பார்க்க முடிகிறது. சொல் விளக்கம் தந்ததற்கு நன்றி, செல்வா.
அடுத்து என் கருத்துக்களைத் தெரிவிக்கும் முன் முக்கியமான ஒன்றை சுட்ட விரும்புகிறேன். திணிவு, எடை, நிறை ஆகிய அனைத்து முக்கியத் தலைப்புகளிலுமே நம்மிடம் இன்னும் கட்டுரை இல்லை!! :(
இப்பொழுது உள்ள புரிந்துணர்வு -
1 . ஏற்கனவே உள்ள தமிழில் பாடநூல்களில் வழங்கும் சொற்களுக்கு இலங்கை, தமிழக வழக்குகளில் சிறந்ததை (பொருள், மொழித் தூய்மை அடிப்படை) பயன்படுத்த வேண்டும். முற்றிலும் இல்லாத சொற்களுக்கு, புதிதாக கலந்துரையாடி சொற்களை அறிமுகப்படுத்தலாம்.
இந்த விதத்தில் நாம் எடுத்தாண்ட நிகழ்படங்கள் போன்ற சொற்கள் ஏற்கனவே சில தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் புழக்கத்துக்கு வந்து விட்டதை கண்டிருக்கிறேன். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் மேற்கோளாகவும், தகவல் ஆதாரமாகவும் பல வலைப்பதிவுக் கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அந்த விதத்தில் தமிழ் விக்கியின் வீச்சு கவனத்துக்குரியது. தமிழ் விக்கிபீடியா நேரடியாக கடைசித் தமிழனை சென்றடைய பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், பிற அச்சு ஊடகக் காரர்களுக்கு தமிழ் விக்கி இன்றே அணுகத்தக்கது தான் என்பதை கருத்தில் கொள்ளலாம். தற்போது அச்சு ஊடகக் காரர்கள் ஆங்கில விக்கியைப் பயன்படுத்துவது போல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் விக்கியைப் பயன்படுத்தத் தொடங்கக் கூடும். குறிப்பாக, தமிழ் சார்ந்த, புது நுட்பத் தலைப்புகளுக்கு. ஏனெனில் அண்மைய நுட்பங்களை தமிழில் விளக்கும் சாத்தியம் உள்ள ஒரே இடம் இது தான். புத்தகங்கள், இதழ்கள், ஆதார நூல்கள் இந்ந வகையில் தமிழில் குறைவு அல்லது இல்லவே இல்லை. இணையம், தரவிறக்கம், பதிவிறக்கம் போன்ற சொற்கள் இணையப் பரப்பில் உருவாக்கப்பட்டு இன்று அச்சு ஊடகங்களாகுலும் எடுத்தாளப்படுகின்றன. இந்த சொற்களை அறிஞர் குழுக்களோ அரசோ உருவாக்கவில்லை. இணையம் அனைத்துத் தமிழர்களையும் முன்னிறுத்தவில்லை என்றாலும், இணையத் தமிழ் ஆர்வலர்களில் சொல்லாக்கங்கள் பொது வாழ்வுக்கு வருவது கண்கூடு. இந்த வகையில் தமிழிணையம், தமிழ் விக்கி அனைத்தும் ஒரு மெய்நிகர் தரப்படுத்தல் அமைப்பாக விளங்க முடியும். விளங்குகிறது. ஆக, நாம் உருவாக்கும் உள்ளடக்கங்கள் உடனுக்குடன் தமிழ் மக்களை சென்றடையும் வாய்ப்பு நிரம்பவே உண்டு.
2. பிரச்சினை எங்கென்றால் ஏற்கனவே தமிழில் இலங்கை, தமிழ்நாட்டில் பாடநூல்களில் புழக்கத்தில் உள்ள சொற்களை புறக்கணித்து விட்டு தமிழ் விக்கியில் புதுச் சொற்களைப் புகுத்துவது முறையா? இதைச் செய்வதற்கு நமக்கு உள்ள தகுதி நிலை என்ன? 15 முனைப்புள்ள பங்களிப்பாளர் மட்டுமே உள்ள நிலையில் இப்படிச் செய்யலாமா? இது தமிழ் விக்கிபீடியாவின் பரவலை பாதிக்குமா என்பது தான். இந்த வகையில் கோபியின் தயக்கம், கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. ஆராயப்பட வேண்டியது. பள்ளி, கல்லூரி முழுக்க சிக்கலெண் என்று படித்து வந்தவன் இங்கு அதை செறிவெண் என்று மாற்றி எழுதி இருப்பதைக் கண்டால், குழம்புவது உறுதி. செறிவெண் என்பது சிக்கலெண் என்பதை விட பொருள் சிறப்பு வாய்ந்தது என்று நான் ஏற்றுக் கொண்டாலும் (சிக்கல் எண் என்பது literal translation தான்), இன்னொரு அறிஞர் இதைக் கலப்பெண் என சொல்லலாம். இன்னொரு அறிஞர் இதை வேறு மாதிரி சொல்லலாம். 50 ஆண்டுகளாக உள்ள சிக்கலெண் என்ற சொல்லை நாம் தவறெனக் கண்டு மாற்றுகிறோம். சரி. அடுத்த ஆண்டு இன்னொருவர் வந்து நாம் மாற்றிய சொல்லையும் மாற்றச் சொல்லி, இன்னொரு நல்ல சொல்லைத் தந்தால?? எத்தனை முறை மாற்றுவது? ஒரு சொல்லின் மாற்றம் பல கட்டுரைகளில் மாற்றத் தேவையைக் கொண்டு வரும். இதனால் வரும் சிக்கல், குழப்பம், துப்புரவுப் பங்களிப்பாளர் சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் செல், திசுள், கலம் என்று cellக்கு மாற்றி மாற்றி எழுதி நானே குழம்பி துறை சார் கட்டுரைகளை எழுதுவதையே விட்டு விட்டேன். அதே தயக்கத்தால், சரியான சொல் இல்லாததால், இருந்தும் புதுச் சொல்லாக இருப்பதால் விக்கி ஏற்பு இல்லாததால் செல்வா போன்றோர் துறை சார் கட்டுரைகளை எழுதுவதை தாமதப்படுத்த வேண்டியும் இருக்கலாம். அதே வேளை ஏற்கனவே உள்ள சொற்களை மாற்றவே கூடாது என்றால் தமிழ்நாட்டில் நாம் இன்னும் சமசுகிருதத் தமிழ் அறிவியல் தான் படித்துக் கொண்டிருப்போம். பல சொற்களில் பொருள் சிறப்பு கூடிய மாற்றம் தேவை. அதற்கு ஒரு களமும் தேவை. ஆனால், அதை தமிழ் விக்கியில் இருந்து தொடங்குவதா என்பதில் எனக்கும் பெரும் தயக்கம் உணடு. எடுத்துக்காட்டுக்கு, தற்போதைய பத்தாம் வகுப்பு மாணவன் இங்கு செறிவெண் என்றும் அவன் புத்தகத்தில் சிக்கலெண் என்றும் இருந்தால் பெரிதும் குழம்பி ஆசிரியரிடமும் திட்டு வாங்குவான். நாம் குழப்புகிறோம் என்று நினைத்து ஆசிரியரும் தமிழ் விக்கியை தடை செய்தால்? ஏற்கனவே உள்ள சொற்களுக்கான மாற்றங்கள் தமிழ் விக்கிக்கு வெளியே அரசு மேற்பார்வையில் பன்னாட்டு அறிஞர் குழு வழியாக சீர்த்தரப்படுத்தப்பட்டு பாடப் புத்தகங்களுக்கும் பிறகு விக்கிக்கும் வருவதே சரியாக இருக்கும். செல்வா போன்று தமிழ்ச் சூழல்களில் பல காலம் இயங்குவோரும் மேல்மட்டத் தொடர்புகள். அறிஞர் தொடர்புகள் உள்ளோர் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது என் வேண்டுகோள்--ரவி 16:24, 20 மார்ச் 2007 (UTC)
- பாடநூல்களில் பயன்படுத்தப்படும் வாரத்தைகளைக் கட்டுரையில் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்பது என் கருத்து. நமது பரிந்துரைகளை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம். ஏனெனில் பாடப்புத்தகங்களின் வீச்சு மிகுதி. இலட்சக் கணக்கான மாணவர்கள் பயின்று வரும் வார்த்தைகளை திடீரென மாற்றினால் அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்.--Sivakumar \பேச்சு 16:47, 20 மார்ச் 2007 (UTC)
[தொகு] Mass - நிறை, திணிவு, பொருண்மை பகுதி-2
ரவி, சிக்கலெண், கலப்பெண் முதலிவற்றுக்கு வழிமாற்று தரலாம். கட்டுரைக்குள்ளும் குறிக்கலாம். குழப்பம் ஏதும் வராது. மேலும் மீசுட்டு இருப்பதால், உடனுக்குடன் எது என்ன என்று புரிந்து கொள்ளலாம். 2-3 வரி விளக்கங்கள் mouse over செய்தாலே பொருள் தெரியுமாறும் வருங்காலத்தில் விக்கியில் மாறுதல் வரலாம். எனவே இதுபற்றியெல்லாம் கவலை கொள்ளவேண்டியதில்லை. --செல்வா 16:50, 20 மார்ச் 2007 (UTC)
- செறிவெண் என்பதை வழிமாற்றியாக வைத்திருக்கலாம். கட்டுரையுள் பிறைக்குறிக்குள் தரலாம். ஆனால் சிக்கலெண் என்பதே முதன்மையாக இருக்க வேண்டும். செறிவெண் என்பதே பொருத்தமென்பது தொடர்பான வாதத்தை ஒரு வலைக்குறிப்பாகத் தந்துவிட்டு வெளி இணைப்புத் தரலாம். மேலும் தமிழக அரச பாடநூல் ஆக்கக்குழுவுக்கு அதனை அறிவித்து மாற்ற முயலலாம். அவ்வாறு மாற்றப்பட்டால் இங்கும் மாற்றலாம். அவ்வாறில்லாமல் இங்கு புதிய சொல்லொன்றை ஆக்கி முதன்மைப் படுத்துவது எவ்விதத்திலும் பொருத்தமல்ல. கோபி 17:20, 20 மார்ச் 2007 (UTC)
- கோபி, அறிவுத்துறைகளில் தமிழில் இன்னும் வளர்ச்சி இல்லை. திருந்தாத இன்றைய நிலையில், இப்படிப் பிடிவாதமாக இருப்பதால் பயன் குன்றுமே அன்றி பயன் வளராது. வளர்ந்தாலும் செழிப்பான வளர்ச்சியாகாது. கலைச்சொற்கள் தமிழ்நாட்டில் பல முறை மாறி வந்துள்ளன, ஆங்கிலத்திலும் இது இன்றும் நிகழ்வது. ஆனால் ஆங்கிலத்தில் நிறுவும் அறிவியலாளர் கழகங்கள் உள்ளன. தமிழில் திருந்தாத இன்றைய நிலையில் இப்படிப் பிடிவாதமாக இருப்பதால் பயன் குறையும். --செல்வா 17:39, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, கலைசொற்கள் மாறுவது பயன்மிக்கதாக இருக்கலாம். மாற்றங்கள் வேண்டுமென்பதற்கான உங்களது விளக்கம் மிகச் சரியே. ஆனால் மாற்றப் பொருத்தமான இடம் த.வி அல்ல என்ற என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. நன்றி. --கோபி 18:23, 20 மார்ச் 2007 (UTC) 18:22, 20 மார்ச் 2007 (UTC)
- த.வி -யில் எல்லாக் கோணங்களில் இருந்தும், இயன்றவாறு சிறப்பாக எல்லாத் தலைப்புகளிலும், கருத்துக்கள் உறுதி செய்யப்பட்டு, தக்க மேற்கோள்களுடன் ஆக்கப்படவேண்டும். கூடிய மட்டிலும், ஓரளவுப் புழக்கத்தில் இருக்கும் சொற்களை தேவைக்கு ஏற்றவாறு எடுத்தாள்வது நல்லது. திருந்தாத நிலையில், தேவையில்லாத இறுக்கம் கொண்டிருந்தால் த.வி வளர்ச்சி அடையாது. "மாற்றப் பொருத்தமான இடம் த.வி அல்ல" என்ற கூற்றை எப்பொழுது ஏற்கலாம் என்றால் நன்றாக வளர்ச்சி அடைந்த ஒரு நிலையில் (அறிவுத்துறை நூல்கள், கலைச்சொற்கள் வலுவாக நிலைப்பெற்ற காலத்தில், நிலையில்), பொருந்தும். காசுப் பாய்ச்சல், மேந்தலை, முண்டக்கூவல் போன்ற சொற்களைத் திருத்தி எழுதுவது தேவை, திருத்தி எழுதும் போக்கும் வரவேற்கப்படவேண்டும். தொடர்ச்சி கருதியோ, பிற கரணியங்களுக்காகவோ இத்தகு சொற்களை பிறைக் குறிகளுக்குள் இட்டுக் காட்டலாம். வழிமாற்றுகளும் தரலாம். "மாற்றக்கூடாது" என்று சொல்லும் அளவுக்கு புழக்கத்தில் இருபதல்ல, அப்படியே இருந்தாலும் திருத்திக்கொள்வதே முறை. கலைக் களஞ்சியம் என்பதும் ஒரு வகையான தரம்-உறுதி செய்யப்படும் எழுத்து (அச்சுக் கலைக்களஞ்சியங்கள் அப்படித்தான்). தரத்திற்கு உறுதி அளிப்பது தொகுப்பாளர்களின் படிப்பு, தகுதி, பட்டறிவு ஆகியவற்றில் இருந்து வருவது. இங்கே விக்கியில், அவை தகர்ந்தெறியப்பட்டன. இதனால் சில குறைவுகள் இருப்பினும், பல நன்மைகளும் உண்டு. எனவே தேவை இல்லாமல் பயன் தராத இறுக்கமான முடிவுகள் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து. த.வி-யில் "மாற்றவில்லை", இங்கு ஆக்குகின்றோம். சில சரியில்லாததை திருத்தக் கடமைப்பட்டுள்ளோம். தவறுகளை பெருக்குவதால் என்ன பயன்? ஏன் பெருக்க வேண்டும்? நல்ல கருத்துக்களை, நல்ல சொல்லாட்சிகளைக் கொள்ள இங்கே தன்னுரிமை இருக்க வேண்டும். பாடநூலில் கலைசொற்கள் இட்டவர்கள் இங்கு வந்து பங்கு கொண்டால் எவ்வளவு பயனுடையதாக இருக்கும்?! திறந்த மனத்துடன் புத்தாக்கங்கள் செய்ய வேண்டுவது நலம் பயக்கும். --செல்வா 19:02, 20 மார்ச் 2007 (UTC)
- நீங்களும் கோபியும் பிறரும் எப்படிச் செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்படியே செய்யுங்கள். என் கருத்துக்களை என்னால் இயன்ற அளவு விளக்கியுள்ளேன். எனக்கு நிறை-எடை-திணிவு-பொருண்மை ஆகிய சொற்கள் தெளிவாக உறுதி செய்யப்பட்டால்தான் இது பற்றிய பிற கட்டுரைகள் எழுத இயலும். லெப்டான் பற்றி எழுதுவதற்கே வளைவுந்தம் முதலிய கட்டுரைகள் எழுதினேன். Mass என்பது ஆயிரக்கணக்கான இடங்களில் வருவது. இதனை சீர்தரப்படுத்துவது மிகவும் தேவை. இது குறித்த இறுக்கமான கொள்கை இடர்ப்பாடுகளும் மிகவும் இடைஞ்சலாக உள்ளது. இது பற்றிய கோபியினுடைய கருத்துக்களும், உங்களுடைய கருத்துக்களும் ஒப்பக்கூடியதாக எனக்கு இல்லை. கலம் என்பது பற்றியும் இக்குழப்பத்தாலேயே அதனை விரிவுபடுத்தாமலும் அது பற்றிய பல கட்டுரைகளைத் துவங்காமலும் உள்ளேன்.--செல்வா 22:01, 20 மார்ச் 2007 (UTC) ஸ்டீஃவன் ஹாக்கிங்கின் "A Brief History of Time" என்பதை மிக அழகாக நலங்கிள்ளி என்பவர் தமிழில் எழுதி உள்ளார் (295 பக்கங்கள்). அதில் mass என்பதற்கு நிறை என்று ஆண்டுள்ளார். தமிழ்நாட்டில் நிறை என்பது mass என்பதற்குப் பரவலாக ஆளப்படும் சொல். இது பற்றி ஒரு தெளிவான முடிவு எடுக்கவேண்டாமா? --செல்வா 22:07, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, சிக்கலெண் விவாதம் வந்ததால் உரையாடல் நீண்டு விட்டது. நிறை massஆ weightஆ என்று இறுதி செய்ய வேண்டியது உடனடித் தேவை. இதை பேச்சு:நிறை பக்கத்தில் உரையாடலாம்--ரவி 07:23, 21 மார்ச் 2007 (UTC)
[தொகு] தமிழ் கலைச்சொற்களை பொதுத்தரம் செய்பவர்கள் யார்?
- Government of Tamil Nadu - Directorate of School Education, Chennai http://www.tn.gov.in/schoolsyllabus/
- Ministry of Education - Government of Sri Lanka - http://www.moe.gov.lk/modules.php?name=Circulars
- Ministry of Education - Singapore - Vision for the Tamil - http://www.moe.gov.sg/corporate/contactonline/2006/issue14/sub_BigPicture_Art02.htm
- Tamil Schools in Malaysia (http://www.yss98.com/03_service/2004/news/disp_ar.php?file=03040101-20040705-0101.htm)
--Natkeeran 17:32, 20 மார்ச் 2007 (UTC)