ஜானகி இராமச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜானகி இராமச்சந்திரன் (Janaki Ramachandran), பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகையுமாவார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த போதே காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவுக்கு ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது.