தமிழ் 99
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் 99 (Tam99) என்பது தமிழ் மொழி வரியுருக்களை கணினியில் உள்ளிடுவதற்கென நியமப்படுத்தப்பட்ட விசைப்பலகை தளக்கோலமாகும்.
பொருளடக்கம் |
[தொகு] உருவாக்கம்
தமிழில் இருக்கும் ஏராளமான விசைப்பலகைத் தளக்கோலங்களால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்கென நியமப்படுத்தப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை தளக்கோலம் தேவை என்று உணரப்பட்டது. இதன் விளைவாக, பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாக 1997ல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணையம் 97 மாநாட்டில் தமிழ் 99 விசைப்பலகை பரிந்துரைக்கப்பட்டது.
1999இல் சென்னையில் நடந்த தமிழ் இணையம் 99 மாநாட்டில் இது முதன்மை நிலை நியம விசைப்பலகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
[தொகு] நியமப்படுத்தல்
மென்பொருள் தயாரிப்பாளர்களும், கணினி சார்ந்த சேவைகளை, பண்டங்களை வழங்குபவர்களும் இந்த நியம விசைப்பலகை தளக்கோலத்தினை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தயாரிக்கும் மென்பொருட்களிலும் வழங்கும் சேவைகளிலும் இவ்விசைப்பலகை தளக்கோலம் மட்டும்தான் அமையவேண்டும் என்றில்லை. ஆனால் கொடுக்கப்படும் தளக்கோலத் தெரிவுகளில் தமிழ்99 தளக்கோலமும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இதன் விளைவாக எந்த மென்பொருளிலும் தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம் கட்டாயம் கிடைப்பில் இருக்கும்.
[தொகு] சிறப்பியல்புகள்
- குறைந்தளவு எண்ணிக்கையிலான விசை அமுக்கல்களை கொண்டிருத்தல்.
- வலுவான விரல்களுக்கு அதிகளவு பயன்பாடும் வலுக்குறைந்த விரல்களுக்கு குறைந்தளவு பயன்பாடும் ஏற்படுத்தல்.
- இடதுகை, வலதுகை என மாறி மாறி அமுக்குதற்குரிய வகையில் எழுத்துக்கள் இடம், வலம் என பரவலாக அமைத்தல்.
- குறைவான அளவில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்களை தூக்கும் விசையை பயன்படுத்தி தட்டெழுதத் தக்கவாறு ஆக்கப்பட்டிருத்தல்.
- எளிதில் நினைவு வைத்திருக்கக்கூடிய வகையிலும் சுலபமான பயன்பாட்டுக்குத் தக்கவாறும் குறில் மற்றும் நெடில் உயிரெழுத்துக்களை அருகருகே அமைத்தல்.
- அடிக்கடி இணைந்து வரும் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ன்ற போன்ற தமிழ் எழுத்துக்கள் இலகுவில் நினைவிருக்கும் வகையிலும் இலகுவான பயன்பாட்டுக்கு ஏதுவாகவும் அமைக்கபப்ட்டிருத்தல்.
[தொகு] தமிழ் 99 விசைப்பலகையின் அறிவுகூர்ந்த இயல்பு விதிகள்
- 1. விசைப்பலகை பின்வரும் எழுத்துக்களை அடையாளங்களாக கொண்டிருக்கும்.
-
- உயிரெழுத்துக்கள் 12
- குற்று
- ஆய்த எழுத்து
- மெய்யெழுத்துக்கள் 18 (அ கரப்படுத்தப்பட்டவை எ+கா: க ச ட த ப ற )
- கிரந்த எழுத்துக்கள் (அ கரப்படுத்தப்பட்டவை)
- 2. மெய்யெழுத்தைத் தொடர்ந்து புள்ளியை அமுக்குதல் தூய மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும்.
எடுத்துக்காட்டாக, க + (புள்ளி) = க்
- 3. மெய்யெழுத்தைத் தொடர்ந்து "அ" தவிர்ந்த உயிரெழுத்தை அமுக்குதல் உயிர் மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும்
எடுத்துக்காட்டாக, க + ஆ = கா
- 4. ஒரு மெய்யெழுத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே மெய்யெழுத்தை அமுக்குதல், முதலாவது மெய்யெழுத்தில் குற்றினை இடும்.
எடுத்துக்காட்டாக, க + க = க்க
- 5. மேற்படி குற்றிடும் வசதி, அதே மெய்யெழுத்து மூன்றாவது தடவை அமுக்கப்படும் போது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக, க + க + க = க்கக
-
- நான்காவது அமுக்கலில் குற்றிடும் வசதி மீள ஏற்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக, க + க +க +க = க்கக்க
- 6. முதலாவது உயிரெழுத்து "அ" மெய்யெழுத்தைத் தொடர்ந்து அமுக்கப்பட்டால் அது முதலாவது அமுக்குதல் அகரமேறிய உயிர்மெய் என்பதை உறுதி செய்கிறது. இது முந்திய அமுக்கத்தோடு வேறு எந்த அமுக்கமும் இணைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. எனவே இந்த நிலையில் எந்த உயிர் அமுக்கமும் முந்தைய மெய்யுடன் இணையாது.
எடுத்துக்காட்டாக, க + அ + இ = கஇ
-
- இங்கு தானியங்கி குற்றிடும் வசதி அடுத்த அமுக்கத்துக்கு மட்டும் நிறுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, க + அ + க = கக
-
- அதற்கடுத்த அமுக்கத்துடன் தானியங்கிக் குற்று மீண்டும் வருகிறது.
எடுத்துக்காட்டாக, க + அ + க + க = கக்க
-
- இங்கு அ எனும் உயிரெழுத்து மெய் இணைப்பகற்றும் குறியீடாக தொழிற்படுகிறது.
- 7. ஒரு மெல்லின மெய்யைத் தொடர்ந்து வல்லின மெய் அமுக்கப்பட்டால், மேலே 3-6 வரை கொடுக்கப்பட்ட விதிகளுக்கமைய மாற்றங்கள் ஏற்படும். இங்கு ங,ச ஞ,ச ந,த ண,ட ம,ப ன,ற ஆகியவை மெல்லின வல்லின மெய் இணைகளாகும்.
எடுத்துக்காட்டாக,
ங + க = ங்க ந + த + த = ந்தத ந + த + த + த = ந்தத்த ந + அ + த = நத ந + அ + த + த = நத்த
- 8. மெய்யல்லாத ஓர் அடையாளத்தை அடுத்து ஓர் உயிரெழுத்து அமுக்கப்பட்டால் அந்த உயிர் சுதந்திரமான உயிராகவே இருக்கும்.
- 9. உயிருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் கொம்பு போன்ற அடையாளங்களை பெறுவதற்கு "கரட்" அடையாளத்தை முதலில் அமுக்கி அதையடுத்து பொருத்தமான உயிரை அமுக்க வேண்டும். கரட் அடையாளத்தை பெறுவதற்கு அதனை இருமுறை அழுத்த வேண்டும்.
- 10. "புல்லெட்" மற்றும் காப்புரிமை வரியுருக்கள் எழுத்துரு திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
- 11. ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள் காட்டிகளை பெறுவதற்கு கரட் அடையாளம் பயன்படுத்தப்படும்
எடுத்துக்காட்டாக,
^ + 7 = இடப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 8 = வலப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 9 = இடப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + 0 = வலப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + S = உடைபடாத வெளி
- 12. அகற்றுதல் மற்றும் பின்னகர்த்த விசைகள் தனி நபர் விருப்பத்துக்கென விடப்பட்டுள்ளன
[தொகு] வெளி இணைப்புக்கள்
- தமிழ் 99 குறித்த தமிழ் இணையப் பல்கலைப் பக்கம்
- சிறந்த தமிழ் விசைப்பலகை எது? - ரவிசங்கர், தமிழ்த்தென்றல் வலைப்பதிவு.