திருவாரூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவாரூர் தமிழ் நாட்டில் உள்ள ஊரும், திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப் படுகிறது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள "திருக்குவளை" எனும் ஊரில் பிறந்தவர்.