Wikipedia:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எழுத்துப்பெயர்ப்பு (transliteration) என்பது ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவதாகும். ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் (Orthography) வேறுபடுவதனால் இது தேவைப்படுகிறது.
|
கூடுமான வரை சொற்களை மொழிபெயர்க்க முயற்சிக்க வேண்டும். முடியாதபொழுது மட்டும் எழுத்துப்பெயர்க்கவும். எல்லா பிற மொழிப்பெயர்களையும் தமிழில் எழுத்துப் பெயர்த்து எழுதுங்கள். அப்பெயர் தமிழ் பேசுவோரிடம் பரிச்சயமில்லாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அதன் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பை அடைப்புக் குறிகளுக்குள் தாருங்கள்.
[தொகு] சில எடுத்துக்காட்டுக்கள்
இங்குள்ள சொற்கள் அவற்றின் ஒலிப்பு முறைக்கான எடுத்துக்காட்டுக்களே. இவற்றில் சிலவற்றை மொழிபெயர்க்க முடியும்.
- aspirin - ஆஸ்பிரின்
- bacteria - பாக்டீரியா
- carbohydrate - கார்போஹைட்ரேட்
- delphin - டெல்ஃபின்
- Empire house - எம்பயர் ஹவுஸ்
- Francis -
- glycerine - கிளிசரின்
- industry - இண்டஸ்ட்ரி
- jet airlines - ஜெட் ஏர்லைன்ஸ்
- kaolin - கயோலின்
- lithium - லித்தியம்
- major - மேஜர்
- Newton - நியூட்டன்
- Nitrogen - நைட்ரஜன்
- Oedipus - ஓடிபஸ்
- Pascal - பாஸ்கல்
- quantum - குவான்டம்/குவாண்டம்
- Rexona - ரெக்ஸோனா
- riboflavin - ரிபோஃபிளவின்
- Sunday Times - சண்டே டைம்ஸ்
- tourist van - டூரிஸ்ட் வேன்
- Uranus - யுரேனஸ்
- Windows 98 - விண்டோஸ் 98
- Zandu balm - ஜண்டு பாம்