பன்னம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலத்திணை (தாவர) வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் மரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்திகள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் கடத்தலிழையத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்
சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:
- நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம்.
- நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
- புரோதலஸ் gametesஐ உருவாக்குகின்றது.
- ஆண் gamete ஒரு பெண் gamete ஐக் கருக்கொள்ளச் செய்கிறது.
- இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே (பன்னம்) ஆக வளர்ச்சியடைகின்றது.
[தொகு] பன்னத்தின் அமைப்பு
[தொகு] பரிணாமமும் வகைபிரிப்பும்
[தொகு] பொருளாதாரப் பயன்பாடு
[தொகு] தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பெயர்கள்
[தொகு] வெளியிணைப்புகளும், உசாத்துணைகளும்
- Tree of Life Web Project: Filicopsida
- A classification of the ferns and their allies
- A fern book bibliography