பழம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு தாவரத்தின் விதைகளைக்கொண்டுள்ள பாகம் காய் என்று அழைக்கப் படுகிறது. சில தாவரங்களில் காய்கள் முற்றும்போது அவை பழமாகின்றன. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரை கொண்டவை. இது பழத்தை உண்ண விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது.
பழங்கள் பற்றிய சில விவரங்கள்:
- பன்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன.
- ஔவை அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியும், நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்தவை.