பாசிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாசிகள் (Algae), பல்வேறு குழுக்களைச் (groups) சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்களைக் குறிக்கும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப் பரப்புகளிலும் காணப்படும். நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் ப்ரோட்டிஸ்ட் மற்றும் ப்ரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம்.