பேச்சு:பாரதா வடிவமொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- தலைப்பு பாரத மொழி விக்கிபீடியாவுக்கு ஏற்றதாக இல்லை.
- விக்கிபீடியா நடைக்கேற்ப கட்டுரை எழுதப்பட்டு பொருத்தமான தலைப்பும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
எனவே கட்டுரையாளருக்கு (வழமையான) ஒரு மாத காலம் காலக்கெடு விடுத்து அதன்பின் இக்கட்டுரை குறித்து தீர்மானிக்கலாம் என்பது என் கருத்து.--Kanags 00:44, 1 ஏப்ரல் 2007 (UTC)
- கனக்ஸ் இதன் முக்கியத்துவம் பற்றிய கேள்விதான் முதல் எழுகிறது. 2007 பெப்ரவரியில் உருவாக்கப்பட்டது. ஒரு மாதம் தேவையில்லை எனபது என் கருத்து.--டெரன்ஸ் \பேச்சு 04:48, 1 ஏப்ரல் 2007 (UTC)
- டெரன்ஸ், நீங்கள் குறிப்பிட்டதுபோல் இந்த மென்பொருளில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்:). (மற்றும் இது நேற்றுத் தான் உருவாக்கப்பட்டிருப்பதாக வரலாறு தெரிவிக்கிறது.)--Kanags 05:33, 1 ஏப்ரல் 2007 (UTC)
ஓஹோ, நீங்கள் மென்பொருள் உருவாகியது பெப்ரவரி 2007 என்று குறிப்பிட்டிருந்தீர்களா?--Kanags 05:37, 1 ஏப்ரல் 2007 (UTC)
விக்கிபீடியா original research குறித்து எழுதவோ விளம்பரப்படுத்தவோ இடம் இல்லை. ஒரு மாதம் முன்னர் ஒருவர் உருவாக்கிய வழிமுறைக்கெல்லாம் இங்கு கட்டுரை தேவை இல்லை--ரவி 07:31, 1 ஏப்ரல் 2007 (UTC)
விளம்பரபடுத்தும் எண்ணத்தில் இக்கட்டுரை வெளியிடப்பட்வில்லை. தகவல் தொழில் நுட்பத்தின் பயனை அனைத்து தரப்பு மக்களும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.இது மென்பொருள் போன்ற புரியாத விடயம் அல்ல.ஆயிரம் ஆயிரம் மென்பொருள்களை பதியம் செய்து பயன்படுத்தச்சொல்லவில்லை.முதல் மொழியாக தமிழையும்,அதை வளப்படுத்த, நெறிபடுத்தப்பட்ட ரோமானிய வடிவத்தை கையாள வேண்டும் என்பதற்க்காக இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் எளிதாக தகவல்க்ளை கணினியிலிருந்து பெறலாம்.ஆனால் தமிழில் நிலை அவ்வாறாக இல்லை.எழுதும் ஒன்று இரண்டு கட்டுரைகளும் விவாத மேடையிலேயே . பொசுக்கப்பட்டு விடுகின்றன.
ஒரு புதிய வரி வடிவம் தமிழுக்கு தேவையில்லாமலிருக்கலாம்.இணைய நினைக்கும் தமிழருக்கு தேவை.
அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் எதில் பலன் அதிகம் என புலப்படும்.தகவல் தொடர்பை எளிதாக கைக்கொள்ள இம்முறை உதவிடக்கூடும்.இம்முறையை கைக்கொள்ள நினைக்கும் சிலருக்கு இக்கட்டுரை பயனளிக்கும்.இம்முறையில் எழுத அனுமதி கிடைத்தால்.ஆயிரக்கணக்கான கட்டுரைகள் கொடுக்க இயலும்.இதை பயில சிறப்பு பயிற்ச்சி ஒன்றும் தேவையில்லை எந்த பாட சாலைக்கும் செல்ல வேண்டியதில்லை.ஒரு மணி நேர சுய பயிற்ச்சியில் கற்று விடலாம்.ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு டாலர் கற்பனையில் இர்ப்பவர்களுக்கு பயன் ஏதும் இல்லை.
வரவு செலவு கணக்கை நாம் அறிந்த சொல் நடையில் பய்ன்படுத்த நினைப்பவருக்கு பயனளிக்கும்.தேவைப்பட்டால் தமிழ் வரி நடைக்கும் மென்பொருள் கொண்டு மாற்றி எழுதிக்கொள்ளலாம்.
--
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதன் நிறை, குறைகள், தேவை குறித்து விவாதிக்க விக்கிபீடியா இடம் இல்லை.உங்கள் முயற்சி குறித்து மொழியியல் சார் கருத்துக் களங்களில் தெரிவிக்கலாம். பொதுப் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் விக்கிபீடியாவில் இது குறித்து விளக்கலாம்.--ரவி 20:36, 1 ஏப்ரல் 2007 (UTC)
இது ஒரு மென்பொருள் என்றால், பாரத மொழி (மென்பொருள்) என்று கட்டுரை ஆக்கினால், பரவாயில்லை என்று நினைக்கின்றேன். தமிழில் இப்படி முயற்சிகள் அரிதுதானே, எனவே அவற்றைப் பற்றிய தகவல்களை தருவது பொருத்தம் என்றே படுகின்றது. --Natkeeran 21:27, 1 ஏப்ரல் 2007 (UTC)
நற்கீரன் கட்டுரையின் தற்போதைய வடிவம் மென்பொருளைக் குறிப்பது போல் இல்லை. அப்படியே குறித்தாலும், அதன் தேவை, பரவல், பயன்பாடு கருதாமல் ஒரு கலைக்களஞ்சியத்தில் சேர்க்க முடியாது. தற்போதைய நிலையில் இது ஒரு எழுத்துப்பெயர்ப்புச் சீர்திருத்தத்தை முன்வைக்கிறது. இது ஒரு proposal / thesis என்று தான் கருத முடியும். இதை முன்வைப்பதற்கு விளக்குவதற்கு விக்கிபீடியா இடம் இல்லை. இக்கட்டுரை உள்ளடக்கங்கள் விக்கிபீடியாவில் இடம்பெறுவதற்கு என் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--ரவி 22:25, 1 ஏப்ரல் 2007 (UTC)
ஆமாம் ரவி, இது ஒரு புது ஆராய்சி கட்டுரை மாதிரித்தான் தெரிகின்றது. துப்பரவு செய்து, விக்கி நூல்களில் போடலாம் என்று நினைக்கின்றேன். --Natkeeran 22:38, 1 ஏப்ரல் 2007 (UTC)
நற்கீரன், என் கருத்தில் இது விக்கிநூல்களில் இடம்பெறுவதற்கும் பொருத்தமற்றது. சரி என்று உறுதிப்படுத்தக்கூடியவற்றையே விக்கித் தளங்களில் இடலாம். இங்கு ஒரு வழிமுறையாகத் தான் ஒருவரால் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் நிறை குறைகளை மொழியிலாளர்கள் தான் அலச வேண்டும். நாம் அல்ல.--ரவி 23:01, 1 ஏப்ரல் 2007 (UTC)
தங்களது ஊக்கத்திற்க்கும்,கருத்திற்க்கும் நன்றி,தாங்கள் கருத்தின் படி இது முதலில் பயன்பாட்டிற்க்கு வர வேண்டும் என்று கூறினீர்கள். எந்த உபயோகமும் அற்ற மெட்ராஸ் பாஷை, தமிங்கிலம் போன்ற கட்டுரைகள் ஏற்க்கப்பட்டுள்ளன.அதை படிப்பவர்கள். அம்மொழியை கற்றுக்கொண்டு இலக்கண இலக்கியங்களையும் படைக்க உதவிடும்.தவறு ஏதும்
இல்லை அம்மொழினடை பயன்பாட்டில் உள்ளதுதான். X கொள்கைகள் எனக்கு விளங்கவில்லை.இது என் முதல் முயற்ச்சிதான்,பரவாயில்லை
இது பொது பயன்பாட்டிற்க்கு வர வேண்டும் என்றால்,இதை பற்றிய தகவல்கள் பொதுவாக தெரிந்தால் மட்டுமே இயலும். நம் மொழியியலாளர்களுக்கு நம் தமிழினின் தொன்மையையும்,இலக்கண இலக்கியத்தை காப்பாற்றும் பெறும் பொறுப்பு இருக்கிறது.அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும் அதை தமிழில் நேரடியாக அறிமுகப்படுத்தவும் அரை நூற்றாண்டுகளாக முயற்ச்சிகள் இல்லை.அரசாங்க முயற்ச்சிகளும் மக்கள் ஆதரவு இல்லாத்தால் கேள்விக்குறியாக உள்ளது.இது வரையில் தமிழில் செயலிகளை இயக்க வகை காணப்பட்டுள்ளதா?.தமிழ் எழுத்துக்கள் அதற்க்கு வகைப்படாமையே இதற்க்கு காரணம்.ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி வழங்க ஒரு தடையும் இல்லை.இதனால் ஆங்கிலம் என்ன அழிந்தா போய்விட்டது .மென்மேலும் பல வார்த்தைகளை ஆக்கிரமித்து வளருகிறது.தமிழும் தமிழனின் மொழியாக மட்டும் இல்லாமல் உலக மொழியாக மாற வேண்டும் .இதை நான் கருத்தாக மட்டுமே கூறவில்லை.வகைப்படுத்தியும் உள்ளேன்.மேலும் இவ்வகையில் எழுதப்பட்டால் பேச்சு உணர்மம் பயடை அதிகரிக்க இயலும் தமிழில் பேச்சு உணர் கணினிகளை உருவாக்கலாம்.
-
- இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன். இது முக்கியமான ஒன்றா இல்லையா என்பது அல்ல இங்குள்ள பிரச்சினை. இதற்கான இடம் த.வி அல்ல. --கோபி 16:49, 2 ஏப்ரல் 2007 (UTC)
கட்டுரையை ஆர்வத்துடன் முன்னெடுப்பவேரே தயவு செய்து ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை ஐயும் எ-கலப்பை தயவு செய்து வாசித்துப்பாருங்கள். --Umapathy 17:40, 2 ஏப்ரல் 2007 (UTC)
இதன் முக்கியத்துவத்தை பற்றி விடுங்கள்.தனி மனித மொழி(personal language) முதற்க்கொண்டு ஃபிக்ஸனல் மொழி (fictional language),அறிவியல் சார் வடிவமைக்கப்பட்ட மொழி(engineered language),அறிவை வெளிப்படுத்தும் மொழி(Knowledge representation language) அனைத்திற்க்கும் விக்பிடியாவில் இடம் உண்டு.இதே போன்று ஆங்கிலத்தில் உள்ள பக்கங்களை உங்கள் கவனத்திற்க்கு அளிக்கிறேன்.http://en.wikipedia.org/wiki/List_of_constructed_languages http://en.wikipedia.org/wiki/Zoinx http://talideon.com/concultures/wiki/என பட்டியல் மிக நீளமாக,அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்தும் வடிவமைக்கப்பட்ட மொழியை பற்றிதான் கூறுகின்றது.தமிழ் விக்கிபிடியாவில் நிராகரிப்பதன் காரணம் புரியவில்லை.
கட்டுரை கூறுவது வடிவமைக்கப்பட்ட ஒரு தனி நடை மொழியை பற்றியதுதான். மென் பொருள்களை பற்றி அல்ல.எ.கலப்பை ஒரு மென் பொருள்.இக் கட்டுரைக்கும் மென் பொருள்களுக்கும் சம்பந்தம் இல்லை.மென் பொருள்களை ஒப்பிட தேவையில்லை.ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை.இது பரவலாக பயன்பாட்டில் உள்ளது சரி.அதன் முறை வேறு, கட்டுரையின் கருத்து வேறு.இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையும் அல்ல.எழுத்து சீர்திருத்தத்தை முன் மொழிவதும் அல்ல.இது ஒரு வடிவமைக்கப்பட்ட மொழியை பற்றியதுதான்.தயவு செய்து இதை மென்பொருள்களுடன் ஒப்பிட வேண்டாம். இது ஒரு வடிவமைக்கப்பட்ட மொழி,அவ்வளவே.
theblando, ஆங்கில விக்கி இணைப்புகள் தந்ததற்கு நன்றி. சில விதயங்களைத் தெளிவு படுத்த இயலுமா? புது மொழியாக இல்லாமல் ஒரு மொழியின் சொற்களின் எழுத்துப்பெயர்ப்பு முறையை மட்டும் மாற்றி எழுதுவதை ஒரு மொழியாக கருதப்படுகிறதா? இதற்கான எடுத்துக்காட்டுக்களை ஆங்கில விக்கியில் இருந்தோ பிற மொழியியல் சார் தளங்களில் இருந்தோ தர இயலுமா?
தனிப்பட்ட முறையில், இது எப்படி ஒரு மொழியாகிறது என்று புரியவில்லை. சொல், பொருள் தமிழில் இருந்த மாற வில்லை. எழுதும் முறை மட்டும் மாறுகிறது. thozhilaaLi, tholilaali, thozilaaLi என்று பல வகைகளில் எழுத இயலுமே? ஒவ்வொன்றையும் ஒரு புது மொழியாகவோ, எழுத்துப்பெயர்ப்பு முறையாகவோ கருத வேண்டுமா? எல்லா பாரத மொழிகளின் சொற்களையும் எழுதுவதற்கு பொது எழுத்துப்பெயர்ப்பு முன்னெடுக்கப்படுகிறதா? தமிழ்-ஆங்கில எழுத்துபெயர்ப்பு முறை அகரமுதலி வல்லுனர்களால் தரப்படுத்தப்பட்டே இருக்கிறது. இதை மாற்றுவதற்கானத் தேவை புரியவில்லை. கணினிக்கு, நுட்பக்கருவிகளுக்கு ஏற்ற மாதிரி தமிழ் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. கணினிக்குத் தெரிந்ததெல்லாம் 1,0 தானே? இந்த எழுத்துப்பெயர்ப்பு முறையில் எழுதினாலும் பேச்சு உணர் செயலிகளில் தமிழ்ச் சொற்களை அப்படியே தானே பலுக்கப் போகிறோம்?
இது குறித்து விக்கிபீடியா தவிர வேறெங்கும் எழுதி இருக்கிறீர்களா? இது மொழியியல் வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லாவிட்டால், இதை original researchஆகத் தான் கருத முடியும்.--ரவி 23:29, 2 ஏப்ரல் 2007
(UTC)
எந்த ஒரு மொழியும் அடிப்படையில் வேறொரு மொழியில் இருந்துதான் வேர் பிரிகிறது.அது அடிப்படையில் அந்த மொழியை ஒத்து இருந்தாலும்,அது சார்ந்திருக்கும் வேறு பல மொழிகளையும் ,எழுதப்படும் முறையையும் வைத்துதான் அது மொழியாக கருதப்படும்.இதற்க்கு உருது ஹிந்தி மொழிகளே எ.கா அடிப்படை பேச்சு வழக்கு ஒன்றாக இருந்தாலும்,அவை சார்ந்துள்ள எழுத்துவடிவங்கள் வெவ்வேறு.உருது பாரசீகத்தையும்,ஹிந்தி சமஸ்கிருதத்தையும் ஏற்று தனித்தனி மொழிகளாக வழங்கிவருகிறது.தமிழ் மொழியிலும் மலயாளம் ஆரம்பத்தில் தமிழ் வார்த்தைகளையும், எழுத்துக்களும்தான் பயன்பாட்டில் இருந்தன.ஆனால் தற்போது அது தனக்கென எழுத்தை உருவாக்கிக் கொண்டு வேர் பிரிந்து வளர்ந்தது.பாரத மொழி தனக்கென ஒர் எழுத்துமுறை கொண்டுள்ளது,தமிழில் ப2,ப3,போன்றவை உபயோகத்தில் இல்லை.இம்மொழியில் ஆங்கில,ஹிந்தி,மற்ற இந்தியமொழிகள் வார்த்தைகளை ஏற்று எழுதுவதற்க்காக அவைகள் உள்ளன.அதே போல் தமிழில் உள்ள ல்,ள்,ற்,ன்,ந்,ஞ், ங், எழுத்துக்கள் இம்மொழியில் இல்லை.பாரத மொழி எழுதப்படும் வகையில்,எந்த ஒலி பெயர்ப்பாளரும் ஒலி பெயர்க்கவில்லை தமிழ் என்பது DMEQ என்று எழுதப்படுகிறது,இம்முறையில் யாரும் மொழிபெயர்க்கவில்லை.பாரத மொழியில் தமிழை DMEQ என்று எழுதப்படுகிறது, இது பாரத மொழி எழுத்து உச்சரிப்பை அறிந்தவர்கள் மட்டுமே படிக்க இயலும்.மற்ற மொழிபெயர்ப்புகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது.எல்லா பாரத மொழி சொற்களையும் எழுத பொது மொழிபெயர்ப்பு உள்ளது.தமிழ் சொற்க்களாக இருந்தாலும் அவை பாரத மொழியின் இலக்கணத்தை ஒட்டியே எழுதப்படும்.எ.கா தமிழில் பல் எனவும் பல எனவும் எழுதப்படுகிறது,ஆனால் பாரத மொழியில் பல்லு PLLU எனவும் பல PL எனப் பொருள்படும்படியாக மாற்றி எழுதப்படுகிறது.அடடா என்று தமிழில் வழங்குவது பாரத மொழியில் அ ட டா A T TA என்று எழுதப்பட வேண்டும். இல்லை எனில் அது அட்டா ATTA என்று படிக்கப்பட்டுவிடும்.ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்தால் அது ஆங்கில உச்சரிப்பு இலக்கணத்தை ஒட்டி அமையும்,எனவே அது ஆங்கில மொழியாகத்தான் அடையாளம் காணப்படும்.எ.கா.மாங்காய் MANGO ,கயிறு COIR என்ற தமிழ் சொற்கள்.ஒலி பெயர்ப்பு முறையில் ஏற்க்கப்பட்டு ஆங்கிலச்சொற்களாக இன்று அடையாளாம் காணப்படுகின்றன.மற்ற உச்சரிப்புகளும் இவ்வாறே ஆங்கில மொழியாகவே அடையாளம் காணப்படும்.அவற்றை தனி மொழியாக கருத இயலாது.பாரத மொழி உச்சரிப்பு இலக்கணத்தில் ஹிந்தியை பின் பற்றுகிறது.வார்த்தையின் இரண்டாவது அல்லது மூன்றாவது எழுத்து அல்லது கடைசி எழுத்து மெய்யெழுத்தாக மாறி ஒலிக்கும்.சுருக்கிய வார்த்தைகளை உருவாக்கும் போதும்,பாரத மொழி தனி நடையில் எழுதப்படுகிறது .தொழில் நுட்ப வார்த்தைக்ளை ஏற்பதில் ஆங்கிலத்தைப்போல் எந்த மொழியிலிருந்து எடுத்தாலும் தன் வரைவுக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதப்படும்.தாய் மொழியின் தாக்கம் இருப்பதால் அதிகம் தமிழ் சார்ந்து உள்ளது.மற்றபடி இம்மொழியில் மற்ற மொழியின் மூலச்சொற்களை தக்கவாறு மாற்றி ஏற்க்கப்படும்.மலயாளத்தில் விளி என்றால் கூப்பிடு.ஆனால் பாரதாவில் டயல் என்பதை குறிக்கும்.பதல் என்றால் ஹிந்தியில் மாற்று என்பதை குறிக்கும்,பாரதாவில் சுவிட்ச்சு என்பதை குறிக்கும்.பதலிகள் என்றால் சுவிட்ச்சுகள் என்று பொருள்படும் இவ்வாறு எழுத்து,சொல்,உச்சரிப்பு முறை ஆகியவை மற்ற மொழிகளில் இருந்து மாறுபடுவதால் இது ஒரு வடிவமைக்க்ப்பட்ட தனித்தமொழி ஆகும்.
http://www.omniglot.com/writing/urdu.htm http://www.omniglot.com/writing/index.htm
தற்போது நிலையில் இக்கட்டுரை,வடிவமைக்கப்பட்ட தனி மனித மொழியை பற்றி மட்டும் கூறுவதால்.இது தொடக்கனிலை ஆராய்ச்சி என்று கூறுவது பொறுத்தம் அற்றது. வடிவமைக்கப்பட்ட தனி மனித மொழி என்ற வகையில் இது ஏற்க்கப்பட வேண்டும்.இது பொது பயன்பாட்டிற்க்கு ஏற்றது எண்பது என் கருத்து ஆனால் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.பொதுபயன்பாட்டு மொழி என்ற வகையில் வந்தால் மொழியறிஞர்களிடம் விவாதிக்கலாம்,வடிவமைக்கப்பட்ட தனி மனித மொழியாக கருதும் போது அதை வேறு யாருடனும் விவாதிக்கத்தேவை இல்லை.இதை வேறு எந்த வலைத்தளங்கலிலும் எழுதவில்லை.தனி மனித மொழிகள் எந்த காரணத்திற்க்கு வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம்,எந்த காரணத்திற்க்காக உருவாக்கப்பட்டது என்றால் அதைப்பற்றி தனி கட்டுரையே எழுதிவிடலாம்.இம்மொழி உருவாக்கத்தின் காரணங்களை சுருக்கமாக கட்டுரையிலே தெரிவித்துள்ளேன்.
- மன்னிக்கவும் theblando.
- //பொது பயன்பாட்டு மொழி என்ற வகையில் வந்தால் மொழியறிஞர்களிடம் விவாதிக்கலாம்,வடிவமைக்கப்பட்ட தனி மனித மொழியாக கருதும் போது அதை வேறு யாருடனும் விவாதிக்கத்தேவை இல்லை.இதை வேறு எந்த வலைத்தளங்கலிலும் எழுதவில்லை.//
மேற்கண்ட கூற்றே இது original research என்பதை தெளிவுபடுத்துகிறது. இதை நிச்சயமாக விக்கிபீடியாவில் அனுமதிக்க முடியாது. உங்கள் உழைப்பை மதிக்கும் அதே வேளை, இது போன்ற பல மொழிகளை பலரும் உருவாக்கி அது பொது பயன்பாட்டுக்கு / விவாதத்துக்கு வராமல், விக்கியில் மட்டும் இருந்தால் ஒரு ஆய்வுக்கான விளம்பரமாகத் தான் பார்க்கப்படும். இது குறித்து நீங்கள் பிறருக்குத் தெரிவிக்க விரும்பினால் உங்கள் வலைப்பதிவிலோ தனித்தளத்திலோ எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிங்கிலம், சென்னைத் தமிழ் ஆகியவற்றை இதனோடு ஒப்பிட முடியாது. அவற்றுக்கு formal recognition இல்லை என்றாலும் சமூகத்திலும் பல ஊடகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்ற வகையில் அவை ஒரு social phenomenonஐக் குறிக்கும் என்பதால் அவற்றைப் பற்றி கட்டுரை எழுதுவது பொருத்தமானமாக இருக்கும். ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு புதிய மொழியை விக்கியில் எழுதுவதை எப்படி அனுமதிக்க முடியும்? esperanto போன்ற உருவாக்கப்பட்ட மொழிகள் கூட பலரும் அறிந்ததாக இருப்பதை கவனிக்கவும்--ரவி 08:59, 3 ஏப்ரல் 2007 (UTC)
த.விக்கியில் வடிவமைக்கப்பட்ட மொழிகளை குறித்த தகவல்கள் இடம் பெறவேயில்லை.இதுவரை எந்த ஒரு வடிவமைக்கப்பட்ட மொழிகளைப்பற்றியும் கட்டுரைகள் இல்லை.தனி மனித மொழிகளை குறித்தும் எதுவும் இடம் பெறவில்லை. esperanto போன்ற சென்றனூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மொழிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல்.இந்த மொழிகளை பற்றியும் பார்க்கவும். Zoinx Armavi and Parthavan, by Nadeem Ahmad Dastmen by (Juan M. Jiménez Noguera) Enochian by Edward Kelley K by Robert Dessaix (interview on Lingua Franca) Lingua Ignota, by Hildegard of Bingen Taneraic, by Javant Biarujia Toki Pona, by Sonja Elen Kisa Zoinx இயல்பாக வளர்ந்த மொழிகளை படிக்கும் போதுதான் சமூகத்தில் பரவலான பயன்பாடு உள்ளதா?என்று பார்க்கவேண்டும் ,மொழி வடிவமைக்கப்பட்டது எனும் பொழுது அது மொழியியல் ஆய்வாளர்களுக்கும்,மொழியியல் ஆர்வலர்களுக்கும் ,மொழியியல் கூறுக்ளை பற்றி அறிந்து கொள்ள வகையுள்ளதா என்று மட்டும் கவனத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்படலாம்.ஆங்கிலம் சார்ந்த அமேரிக்காவில் மட்டும் நாற்பதாயிரம் மொழி வடிவமைப்பாளர்கள் உள்ளனர்.மொழி வடிவமைப்பாளர்களால் பல புதிய சொற்கள் அவர் சார்ந்திருக்கும் மொழிக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றன்.பலப்பல திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.வடிவமைக்கப்பட்ட தனி மனித மொழி என்பதாலேயே அதில் மற்ற மொழிகளில் இல்லாத மொழியியற்கூறுகள் இல்லை என்று ஆகி விடாது.தனி மனித மொழி வடிவமைப்பு மென்பொருள் வரையில் வளர்ந்துள்ளது. மொழி வடிவமைப்பும் ஒரு கலைதான்,அதை பற்றிய கட்டுரை வெளியிடுவதில் தவறு ஏதும் இல்லை. வடிவமைக்கப்பட்ட மொழிகளை பற்றி பல கட்டுரைகள் வந்தால், அவற்றில் மொழியியற் கூறுகளை உள்ளடக்கிய சிறந்த கட்டுரைகளை மட்டும் வெளியிடலாம்.வெறும் மொழிகளை வடிவமைத்து அவற்றை பற்றிய கட்டுரைகளை மட்டும் வெளியிடுவது விளம்பரமாகாது.
வடிவ்மைக்கப்பட்ட மொழிகளை பற்றி பல கட்டுரைகள் வந்தால், அவற்றில் மொழியியற் கூறுகளை உள்ளடக்கிய சிறந்த கட்டுரைகளை மட்டும் வெளியிடலாம்.வெறும் மொழிகளை வடிவமைத்து அவற்றை பற்றிய கட்டுரைகளை மட்டும் வெளியிடுவது விளம்பரமாகாது.மொழி வடிவமைப்பாளர்களின் தேவை மிக உள்ளது.ஊடகங்களிலும், அறிவியற் கதைகளுக்கும்,திரைப்படங்களிலும் பணியாற்ற தேவைப்பாடுகள் உள்ளன.அவர்களுக்கு பயன்படுமாறு சில கட்டுரைகளாவது அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வடிவ்மைக்கப்பட்ட மொழிகள் பெரும்பாலும் இவ்வகையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவற்றை பற்றிய தகவல்கள் தமிழிலும் இடம் பெற் வேண்டும்.எவ்வாறு தமிங்கிலம் மெட்ராஸ் பாஷை போன்றவை ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறதோ,அவ்வாறே வடிவமைக்கப்பட்ட மொழிகளுக்கும் தேவைகள் உள்ளன.ஆங்கில மொழிப்படங்களில் பெரும்பாலும் வடிவமைக்கப்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இங்கு அதன் பயன்பாடு உணரப்பெறாததால் தமிங்கிலமும் ,மெட்ராஸ் பாஷையும்,மற்றும் பல வட்டார வ்ழக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.வரலாற்று நிகழ்வுகளை குறிக்கவும் பல வடிவமைக்கப்பட்ட மொழிகள் உதவுகின்றன.
-
- இந்த உரையாடல் பயனற்று நிள்கிறது. கட்டுரையாசிரியர்களுக்கு விக்கி நடைமுறை விளங்குவதாகவும் தெரியவில்லை. ஏனையோருக்கு நீக்க ஆட்சேபணை இருப்பின் தெரியப்படுத்தவு. நன்றி. கோபி 20:10, 3 ஏப்ரல் 2007 (UTC)
Theblando, வடிவமைக்கப்பட்ட மொழிகள் என்ற தலைப்பில் அதன் வரலாறு, தேவை, பயன்பாடு குறித்து ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமானால் நன்று. மற்றபடி, என் முந்தைய கருத்தில் மாற்றம் இல்லை. --ரவி 20:20, 3 ஏப்ரல் 2007 (UTC)
- கோபி, அவசரப்பட வேண்டாம். ரவி கூறியதுபோலப் புதிய தலைப்பில் இக்கட்டுரைத் தகவலையும் உள்ளடக்கியதாக பொதுவான கட்டுரையை உருவாக்கலாம் என்றே நினைக்கிறேன். எனவே காலக்கெடு விடுத்து பின்னர் தீர்மானிக்கலாம் என்பது எனது கருத்து.--Kanags 21:30, 3 ஏப்ரல் 2007 (UTC)
வடிவமைக்கப்பட்ட மொழிகள் என்ற தலைப்பில் கட்டுரை அவசியம். ஆனால், பாரத மொழி குறித்த தகவல்கள் இக்கட்டுரையிலோ அதிலோ இடம்பெறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. உடன் நீக்க வேண்டும்.--ரவி 07:50, 4 ஏப்ரல் 2007 (UTC)
இவ்வலை குழுக்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.இம்மொழி பற்றிய தகவல்களும் காணகிடைக்கின்றன.
- பாரத மொழியை பற்றி விவாதிக்கும் வலைகுழுக்கள்
இவ்வலைகுழுக்களில் இம்மொழி பற்றிய தகவலகள் காணக்கிடைக்கின்றன.
- பாரத மொழி தெலுகு விக்கிபிடியாவில்
[பாரெய தமிழ் ]
[தொகு] sockpuppet
இதை ஏன் இங்கு கொடுக்கிறீர்கள் என்று எனக்கு ஒன்றுன்ம் விளங்கவில்லை. 122.164.147.124,Theblando இந்த வலப்பதிவுகள் 2 இல் முதலாவதில் 6 பயனரதில் 2 பேர் மட்டுமே செயற்படுகிறார்கள். அடுத்ததில் 3 பயனர்கள் அதில் ஒருவர் மட்டுமே செயற்படுகிறார். குழுக்களை இங்கு சேர்க்க தேவையில்லை. 122.164.147.124,Theblando என்பவர் இருவரும் ஒருவரே என்பது என்கருத்தாகும். அதிகாரிகள் இந்த இரு பயனர்களும் sockpuppet செய்கிறார்களா என்பதை சோதனை செய்வது அவசியம் என்பது என் கருத்தாகும். எதோ உருவாகியவர் Theblandoவை காட்டிலும் இதில் ஈடுபாடுள்ள இன்னொருவர் 122.164.147.124 இருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
மேலும் உருவாக்கியவரே அதைப்பற்றி கட்டுரை எழுதுவது ???????????????? இந்த உரையாடல்கள் நேரம் வீணடிக்கப்படும் வேலை. எனது நேரத்தை விக்கியில் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடுத்தவே விரும்புகிறேன். ஆசிரியருக்கு விக்கி, வலைத்தளம் பற்றிய வேறுபாடு விளங்கவில்லை.
ஆம் நிச்சயமாக ஓரே பயனராகத்தான் இருக்கவேண்டும். ஒரே இணைய சேவை வழங்குனரிடம் இருந்து BHARTI INFOTEL LTD ஒரே இடத்தில் இருந்தும் தில்லியில் இருந்தும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதில் விவாதிப்பது எனக்கும் நேரத்தை வீண்டிக்கும் செயல்போன்றே தெரிகின்றது. இதுபோன்ற அநாவசியமான வேலைகளில் மூக்கை நுளைப்பதை நான் விரும்பவில்லை.--Umapathy 09:17, 5 ஏப்ரல் 2007 (UTC)