பேச்சுத் தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேச்சுத் தமிழ் எனப்படுவது வழமையான எழுத்து வடிவத்தை விடுத்து வாய்வழியாக பேசப்படும் மொழி வழக்கு ஆகும். உதராணமாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்பில் உள்ள பேச்சுத் தமிழில் இருந்து வேறுபடுகின்றது. இது போல தமிழ்நாட்டில் சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்பன குறிப்பிடத்தக்க பேச்சுத் தமிழ் வடிவங்களாகும்.