மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வைகோ இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை, இக்கட்சி தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இடம் பெற வில்லை. எனினும், இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. 1999 - 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றதன் மூலம் ஆட்சிப்பொறுப்பிலும் இருந்துள்ளது.