மாலே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தகவல் சுருக்கம் | |
உரிமை | Kaafu Atoll |
அமைவு | [1] |
மக்கள் தொகை | 81,647 (2004) |
நீளம் | 1.7 கி.மீ |
அகலம் | 1.0 கி.மீ |
மாலே (திவெயி: މާލެ), மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.
மாலே நகரமானது போர்த்துக்கேய வணிகர்களால் 16 ஆம் நுற்றாண்டில் தொடங்கப்பட்டது.[2]
மாலே, பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட தீவாகும். மேலும், இது உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி கூடிய நகரமாகும். இந்நகரம் நான்கு பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
டிசம்பர் 26, 2004 இல் இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004 காரணமாக மாலே நகரின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது.
[தொகு] பெயர்
மாலே என்பது "மாகா ஆலை" என்ற சமஸ்கிருத மொழி சொல்லில் இருந்து வந்ததாகும். மாகா என்றால் பெரிய ஆலை ஆகும். மகா ஆலை என்பது அரண்மனை அல்லது தலைநகரை குறித்ததாகும்.