மின்தூண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மின்தூண்டி (Inductor) மின்காந்த சக்தியை காந்த புலத்தில் தேக்கி மின்னழுத்தை அல்லது மின்னோட்டத்தை தூண்டும் வல்ல ஒரு மின் கருவி. குறிப்பாக நேரடி தொடர்பின்றி மின்னழுத்தத்தை தூண்டவும், மின்காந்த சக்தியை தற்காலிகமாக தேக்கி மின்னோட்டத்தை பேணவும் மின்தூண்டி மின் சுற்றுகளில், இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுகின்றது.
மின்தூண்டி சுருள் கம்பங்களால் ஆனது. மின் தூண்டல் விளைவு இவ் சுருள் கம்பங்களில் இருக்கும் ஆடல் மின்னோட்டங்களின் ஒருமித்த விளைவுதான். ஆடல் மின்னோட்டம் அல்லது மாறும் மின்னோட்டம் மாறும் காந்த புலத்தை உற்பத்திகிறது. மாறும் காந்த புலம் மின்னழுத்தத்தை உற்பத்திக்கிறது அல்லது தூண்டுகின்றது. இந்த மின்னழுத்தம் ஒரு மாறும் மின்னோட்டத்தை எதிர் திசையில் உற்பத்திக்கிறது.
[தொகு] கணித விபரிப்பு
மாறும் மின்னோட்டத்தின் விளைவாக உருவாகும் காந்த புலத்தை காந்த பாயம் கொண்டு அளவிடலாம். மாறும் காந்த பாயம், மொத்த சுருள்களின் எண்ணிக்கை, மின்னழுத்தம் ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு எடுத்துரைக்கின்றது.
-
-
-
- மின்னழுத்தம் = சுருள் எண்ணிக்கை X மாறும் காந்த பாய விகிதம்
- v = NdΦ / dt
-
-
[தொகு] நுட்பியல் சொற்கள்
- மின்தூண்டி - Inductor
- மின்தூண்டுதிறன், மாறுமின் தூண்டு தடை, மின் தூண்டம் - Inductance
- தூண்டு புலம் - Inductive Field
- தூண்டு சுருள் - Induction Coil
- தூண்டல் விளைவு - Inductive Effect
- மின்காந்த சத்தி - Electromagnetic Energy
- ஆடல் மின்னோட்டம், மாறும் மின்னோட்டம் - Alternating Current
- மின்சுற்று - Electric Circuit
- மின்புலம் - Electric Field
- மின்காந்த சத்தி மூலம் - Electromagnetic Energy Source
- மின்னூட்டம் - Electric Charge Flow
- மின்னோட்டம் - Electromagnetic Current
- மின்னழுத்தம் - Voltage
- காந்த புலம் - Magnetic Field
- காந்த பாயம் - Magnetic Flux