மு. க. ஸ்டாலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். தற்போதைய தமிழ்நாடு அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவர் தமிழக அரசியல்வாதியான மு. கருணாநிதியின் மகன் ஆவார். அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முன் முந்தைய சட்டமன்றங்களில் அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.