யாஹூ!
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாஹூ! (Yahoo!) "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத இணையச் சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் வலைவாயில் (web portal) ஆகும். இந்நிறுவனம் இணையப் போட்டல், இணையத்தளங்களைப் பட்டியலிடுதல், மற்றும் பிரபலமான யாஹூ!மெயில் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இது அமெரிக்காவின் ஸ்ரான்போட் பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவர் 1994 இல் ஆரம்பிக்கப் பட்டு 2 மார்ச் 1985 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது.
அலெக்ஸா இன்ரநெட் மற்றும் நெட்கிறாவ்ட் சேவையின் படி இணையத்தில் யாகூவே இணையத்தில் அதிகூடியவர்கள் பார்வையிடும் தளமாக அமைகின்றது. அக்டோபர் 2005 தரவின் படி யாஹூ! நாளொன்றிற்கு 3.5 பில்லியன் பக்கங்கள் பார்வையிடப் படுவதாகத் தெரிகின்றது.
[தொகு] வரலாறு
யாஹூவானது ஜெரியின் வையக வலையின் வழிகாட்டியாகவே ஆரம்பிக்கப் பட்ட போதும் பின்னர் அகராதியின் துணையுடன் "Yet Another Hierarchical Officious Oracle" எனபதைப் பெற்றுக் கொண்டது.
யாஹூ! இணையத்தில் பிரபலமைடைந்து வரத் தொடங்கியது. இது இணையத்தில் எல்லாவிதமான தேவைகளிற்கும் ஒரேதளத்தில் தீர்வையளிக்கத் தொடங்கியது. இச்சேவைகளாவன் இணையமூடான மின்னஞ்சலான யாகூ! மெயில் , யாகூ! மெசன்ஜர், மிகவும் பிரபலமான குழு மின்னஞ்சல், இணையமூடான கணினி விளையாட்டுக்கள், உரையாடல்கள், இணையமூடான வர்த்தம், ஏல விற்பனை. இதில் அநேகமானவை தனித்தியங்கிய சேவைகளை யாகூ வாங்கிக் கொண்டது. உதாரணமாக ஜியோசிற்றீஸ் இலவசமான இணையத்தளத்தை வைத்திருக்கும் சேவை, ராக்கெட் மெயில்போட்டியான மின்னஞ்சல் சேவை வழங்குவோர் போன்றவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
[தொகு] இந்திய மொழி ஆதரவு
யாஹூ! இந்தியா தற்போது ஏழு இந்திய மொழிகளிற்கான ஆதவவை வழங்குகின்றது. தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தற்போது ஆதரவு வழங்குகின்றது. இது ஆரம்பக்கட்ட பரீட்சார்த்தமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழில் யாகூ இந்தியா (தமிழில்)
- அதிகாரப்பூர்வ வலைத்தளம் (ஆங்கிலத்தில்)
- நிறுவனத்தின் மைல்கற்கள் (ஆங்கிலத்தில்)
- நிறுவனத்தின் வரலாறு (ஆங்கிலத்தில்)