விக்டோரியா அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், ஸாம்பியா, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது.
டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி ஒருவர் 1855 இல் இவ்விடத்துக்கு வந்தார். உள்ளூர் மக்கள் இந் நீர்வீழ்ச்சியை, புகையும் இடியும் என்னும் பொருளில், மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என்று அழைத்து வந்தார்கள். எனினும், லிவிங்ஸ்டன், இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார்.
இது இரண்டு தேசியப் பூங்காக்களின் பகுதியாக உள்ளது. ஒருபக்கத்தில் இது ஸாம்பியாவிலுள்ள, மோசி-ஓவா-துன்யா தேசியப் பூங்காவும், மறுபக்கம், ஸின்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சித் தேசியப் பூங்காவும் உள்ளன. இது ஆபிரிக்காவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும், உள்ளது.