விநாயகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விநாயகர் என்ற பெயர் இந்து சமய ஆண்பால் கடவுள்களுள் ஒன்றான யானை முகத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள உருவத்தை குறிக்கும்.
இந்து மத்தத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியவற்றின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.
[தொகு] இக்கடவுளின் வேறு பெயர்கள்
- பிள்ளையார்
- கணபதி
- ஆனைமுகன்
- கஜமுகன்
- விக்னேஸ்வரன்
வருடந்தோறும் ஆவணி மாதம் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் ஒன்றாகும்