ஹென்றி ஃபயோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹென்றி ஃபயோல் (Henri Fayol, 1841 - 1925) ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் மிகுந்த தாக்கமுடையவனாக இருந்தன. 1917 இல் Administration industrielle et générale என்ற நூலை வெளியிட்டார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1949 இல் General and Industrial Management என்ற தலைப்பில் வெளிவந்தது.
[தொகு] ஹென்றி ஃபயோலின் முகாமைத்துவ தத்துவங்கள்
நிறுவனம்மொன்றின் முகாமைத்துவம் சரிவர இயங்க சில தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என ஹென்றி ஃபயோல் கோடிட்டுக்காட்டுகின்றார் அவையாவன:
- தொழிற்தேர்ச்சி (Specialization of labor) - ஊழியர் ஒருவர் தொழிலில் தேர்ச்சியடைவதனையும்,முன்னேற்றமடைவதையும் முகாமை ஊக்குவிக்கவேண்டும்.
- அதிகாரம் (Authority) - அதிகாரமும் பொறுப்பும் சரிவர வகைப்படுத்தப்படுத்தபடல் வேண்டும்.
- நன்னடத்தை (Discipline)
- கட்டளையிடலில் ஒற்றுமை (Unity of command) - ஊழியர் ஒருவருக்கான கட்டளை/அறிவுறுத்தல்கள் பலரால் பிறப்பிக்கப்படக்கூடாது,தனி ஒருவரால் பிறப்பிக்கப்படவேண்டும்.
- நெறிப்படுத்தலில் ஒற்றுமை (Unity of direction) - ஒர் குறிப்பிட்ட நோக்கினை அடைவதற்காக நிறுவனத்தின் சகல பகுதிகளும் வழிநடத்தப்படவேண்டும்.
- பொதுநலன் பேணல் (Subordination of Individual Interests)
- சன்மானம் வழங்குதல் (Remuneration)
- மையப்படுத்தல் (Centralization)
- படிச்சங்கிலி (Chain of Superiors)
- முறைமை ஒழுங்கு (Order)
- நடுநிலை (Equity)
- ஆளணியின் உறுதித்தன்மை (Personnel Tenure)
- முன்முனைதல் (Initiative)
- ஒற்றுமையே பலம் (Esprit de corps)