இரும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
'இரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இது உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்றாகும். இதன் அணு எண் 26 ஆகும்.
[தொகு] குறிப்பிடத்தக்க குணங்கள்
இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது.
[தொகு] உடல்நலத்தில் இரும்பின் பங்கு
குழந்தைகள், விடலைகள் (Teenagers) , குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.