கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலத்தீன் மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழி ஆகும். ஆனால் கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகர் என்னும் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளது. இது முதலில் இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது. ரோமானியப் பேரரசின் காலத்தில் ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில் முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில் கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 வாக்கில் டைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன்(Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெல்டிக்மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் அகரவரிசை (நெடுங்கணக்கு) ஆனது எற்றசுக்கன் மொழி, கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்கள் கொண்டது. இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் நெடுங்கணக்கு
A |
B |
C |
D |
E |
F |
Z |
H |
I |
K |
L |
M |
N |
O |
P |
Q |
R |
S |
T |
V |
X |
எழுத்து |
A |
B |
C |
D |
E |
F |
G |
H |
I |
K |
L |
M |
N |
எழுத்தின் இலத்தீன் பெயர் |
ā (ஆ) |
bē ('பே) |
cē (சே) |
dē ('டே) |
ē (ஏ) |
ef (எஃவ்) |
gē ('கே) |
hā (ஹா) |
ī (ஈ) |
kā (கா) |
el (எல்) |
em (எம்) |
en (என்) |
இலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (IPA) |
/aː/ |
/beː/ |
/keː/ |
/deː/ |
/eː/ |
/ef/ |
/geː/ |
/haː/ |
/iː/ |
/kaː/ |
/el/ |
/em/ |
/en/ |
எழுத்து |
O |
P |
Q |
R |
S |
T |
V |
X |
Y |
Z |
எழுத்தின் இலத்தீன் பெயர் |
ō (ஓ) |
pē (பே) |
qū (க்யூ) |
er (எர்) |
es (எஸ்) |
tē (தே) |
ū (ஊ) |
ex (எக்ஸ்) |
ī Graeca |
zēta (*சீட்டா) |
இலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (IPA) |
/oː/ |
/peː/ |
/kʷuː/ |
/er/ |
/es/ |
/teː/ |
/uː/ |
/eks/ |
/iː 'graika/ |
/'zeːta/ |
The Duenos inscription, dated to the 6th century BC, shows the earliest known forms of the Old Latin alphabet.