காங்கோ ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காங்கோ ஆறு (சயர் ஆறு என்று முன்னர் வழங்கப்பட்டது.) ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஆறு ஆகும். இதனுடைய நீளம் 4,374 கி.மீ.களாகும். இந்த ஆறே நைல் ஆற்றிற்கு அடுத்து ஆப்பிரிக்காவின் நீளமான ஆறாகும்.
இந்த ஆறும் இதன் துணை ஆறுகளும் உலகின் ஐந்தாவது பெரிய மழைக்காடுகளின் வழியாகப் பாய்கின்றன. அமேசான் ஆற்றிற்கு அடுத்து அதிக நீரோட்டம் உடைய ஆறு இதுவாகும்.