குட்டால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டேம் ஜேன் குட்டால் (Dame Jane Goodall, பிறப்பு: ஏப்ரல் 3, 1934) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுக் புரவுக்காட்டில் (Gombe Stream National Park) இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். புகழ் பெற்ற பழ உயிரினவியல்ஆய்வாளர் முனைவர் லீக்கி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை 1964ல் அளித்தது.