குதிரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு ஆகும். இது நீண்ட காலத்திற்கு முன்பே மனிதனால் பழக்கப்பட்ட ஒரு விலங்காகும். குதிரையானது மனிதனின் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய வாகனமாகவும் ஏர் உழுவதற்கும் கடந்த நூற்றாண்டு வரை இருந்தது. பண்டைய இராணுவ படைகளில் குதிரைப்படை முக்கியமான ஒன்றாகும். மேலும் சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் வல்லமை கொண்டவை.