செங்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெய்யிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.