துணைக்கோள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துணைக்கோள் அல்லது நிலா என்பது ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். நில உலகைச் சுற்றி வரும் நிலா, நில உலகின் ஒரே இயற்கையான துணைக்கோள். இதே போல வியாழனைச் சுற்றி 63 இயற்கையான துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. கலீலியோ தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த தொலைநோக்கியைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார்.