நிரல்மொழிமாற்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்ட நிரலை இன்னுமொரு நிரல் மொழிக்கு மாற்றும் ஒரு நிரல் நிரல்மொழிமாற்றி (Compiler) எனப்படும். பொதுவாக சி++, யாவா போன்ற ஒரு மேல்நிலை மொழிகளில் இருந்து நிரல்மொழிமாற்றி கீழ்நிலை பொறி மொழிக்கு மாற்றும். நிரல் எழுதப்பட்ட மொழி மூல மொழி என்றும், அது மாற்றப்படும் மொழி பெயர்ப்பு மொழி என்றும் அழைக்கப்படும்.
கணினி வன்பொருள்கள் பொறி மொழியையே புரிந்து கொள்வதால் ஒரு மேல் நிலையில் எழுதப்பட்ட ஒரு நிரல் கணினியில் இயங்குவதற்கு நிரல்மொழிமாற்றி அவசியம். இணையாக, ஏற்கனவே மொழிமாற்றப்பட்ட நிறைவேற்றத்தகு நிரலாக இருந்தாலும் கணினி அந்நிரலை நிறைவேற்றும்.
கணினி இயங்கும் நேரத்தில் மொழிமாற்றும் நிரல் மொழிமாற்றிகள் interpreters எனப்படும்.
[தொகு] நுட்பியல் சொற்கள்
- நிரல்மொழிமாற்றி - Compiler
- மேல்நிலை நிரல்மொழி - High Level Languages
- கீழ்நிலை நிரல்மொழி - Low Level Languages
- மூல மொழி - Source Language or Source Code
- பெயர்ப்பு மொழி - Target Lanague
- வன்பொருள் - Hardware
- பொறி மொழி - Machine Language
- நிறைவேற்றத்தகு நிரல் - Executable Program
- நிறைவேற்று- Execute
- Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
- Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
- Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி