யாசர் அராஃபத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முகம்மத் அப்துல் ரவூப் அராஃபத் அஸ் அவுத்வா அல் உசேனி (ஆகஸ்டு 4 (அ) ஆகஸ்டு 24, 1929 - நவம்பர் 11, 2004) அபுஅமர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் நம் காலத்து வரலாற்று நாயகர்களில் ஒருவர். பாலஸ்தீனிய விடுலை இயக்கத் தலைவர்களில் ஒருவர். 1994 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்.