ரோனால்டு ரேகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரோனால்டு வில்சன் ரேகன் (பிப்ரவரி 6, 1911 - ஜூன் 5, 2004) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.