அதிபரவளைவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதவியலில் அதிபரவளைவு (Hyperbola) என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது ஒரு செங்குத்து வட்டக் கூம்பு மேற்பரப்பும், ஒரு தளமும் ஒன்றையொன்று வெட்டும்போது உருவாகிறது.
நிலையான இரண்டு புள்ளிகளிலிருந்து தனது தூரத்தின் வித்தியாசம் மாறாது இருக்கும் வகையில் இயங்கும் புள்ளியொன்றின் ஒழுக்கு அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு வரைவிலக்கணம் கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் குவியங்கள் எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் மையத்துக்கும், அதன் உச்சியொன்றுக்கும் இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.