இந்திய தேசிய காங்கிரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய தேசிய காங்கிரஸ் | |
---|---|
![]() |
|
தலைவர் | சோனியா காந்தி |
நிறுவப்பட்டது | 1885 |
தலைமை அலுவலகம் | 24, அக்பர் சாலை, புது தில்லி - 110011 |
கூட்டணி | தேசிய முற்போக்குக் கூட்டணி |
கொள்கை நிலை | Social Democratic / Populist |
பிரசுரங்கள் | காங்கிரஸ் சந்தேஷ் |
இணையத்தளம் | http://www.congress.org.in |
இவற்றையும் பார்க்கவும் | இந்திய அரசியல் இந்திய அரசியல் கட்சிகள் |
இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) (காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக INC) இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 14வது இந்திய நாடாளுமன்றத்தில் (2004 - 2009), 145 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. இடது முன்னணியின் ஆதரவுடன் நடைபெறும் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.