உபநிடதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபநிடதங்கள் பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன.
வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை
- கர்ம காண்டம்
- உபாசன காண்டம்
- ஞான காண்டம்
இவற்றுள் ஞான காண்டம் அல்லது 'உப நிஷத்' உப நிடதம் எனப்படுவது ஆன்மாவைப்பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக்கொள்ளலாம். இந்த வேதத்தில் 148 உப நிஷத்துக்கள் உள்ளன. அவற்றில் பன்னிரண்டு முக்கியமானவை என்பர். அவையானவை
- ஈசம்
- கேனம்
- கடமன
- ப்ரசனம்
- முண்டகம்
- மாண்டூக்யம்
- ஜதரேயம்
- கௌஹீதகி
- தைத்ரீயம்
- சுவேதாச் வதரம்
- பிரகதாரண்யம்
- சாந்தோக்சியம்
காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய உபநிஷத்துக்களுக்கு விரிவுரை எழுதியுள்ளனர்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] துணை நூல்கள்
- சோ. ந. கந்தசாமி, (2004), இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்