ஐக்கிய தேசியக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ. தே. க) இலங்கையின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. க ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் திரு. டீ. எஸ். சேனாநாயக்க ஆவார்.
கட்சியின் தற்போதய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி 2002 பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.