ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்கள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணாமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். 1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகய்த் தடைப்படவே போட்டியைக் கைவிடப்பட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப் போது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 பந்து பரிமாற்றங்களுடன் ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் அவுஸ்திரேலியா 5 விகெட்டுகளால் வெற்றிப்பெற்றது. 1970களில் அவுஸ்திரேலிய பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வர்ண சீருடைகள், வெள்ளைப்பந்து, செயற்கை ஒளி, விக்கெட் ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.
[தொகு] ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்
பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபை எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.
தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 10 அணிகள் நிரந்தர ஒருநாள் தகுதியைக் கொண்டுள்ளன.
பாகிஸ்தான் |
இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்டச் சபை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] உசாத்துணைகள்
- International Cricket Rules and Regulations at the ICC website
- ICC Chief Executives' Committee approves introduction of ODI innovations by Jon Long, ICC website, June 25, 2005, retrieved November 25, 2005
- "ODI changes to take effect in NatWest Challenge" by Cricinfo staff, Cricinfo, June 30, 2005, retrieved November 25, 2005
- "Those new one-day rules explained" by Cricinfo staff, Cricinfo, July 8, 2005, retrieved November 25, 2005
- "The expanding one-day world" by Martin Williamson, CricInfo, January 6, 2006