கிறிஸ்துமஸ் மரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான அங்கமாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு அண்மித்த நாட்களில் இம்மர அழகூட்டங்களைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.
[தொகு] வரலாறு
கிறிஸ்தவத்துக்கு முந்திய ஐரோப்பிய நாகரிங்களில் தொடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிறிஸ்துமஸ் மரம், குளிர்காலங்களில் பல நாகரிங்களின் பொதுவான காட்சியாக காணப்பட்டது.