ஜேம்ஸ் டூயி வாட்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) (பிறப்பு - 1928), அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து (1951) ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார்.1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.
[தொகு] Further reading
- James D. Watson and Francis H. Crick. "Letters to Nature: Molecular structure of Nucleic Acid." Nature 171, 737–738 (1953).
- James D. Watson, The Double Helix: A Personal Account of the Discovery of the Structure of DNA, Atheneum, 1980, ISBN 0689706022 (first published in 1968)
- James D. Watson, Genes, Girls, and Gamow: After the Double Helix, Random House, January, 2002, hardcover, 259 pages, ISBN 0375412832
- James D. Watson and Andrew Berry, DNA: The Secret of Life, Random House, April, 2003, hardcover, 464 pages, ISBN 0375415467
[தொகு] External links
[தொகு] அருஞ்சொற்பொருள்
- பாக்டீரியா திண்ணி - Bacteriophage
- மனித மரபணு ரேகை - Human genome
- ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் - Deoxy ribo nucleic acid