டச்சு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டச்சு ( நீடலான்ட்ஸ்) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு செர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான டச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். டச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் செர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.