தமிழ் அகரமுதலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகரமுதலி அல்லது அகராதி என்ற சொல், அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கும்.
இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.
முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது 16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர் ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் கிறிஸ்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ் அகராதியின் தோற்றம்
தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. இந்த வரிசையிலே இரேவண சித்தர் என்பவர் ஆக்கிய அகராதி நிகண்டு என்பது ஒரு முக்கியமான திருப்பமாகும். இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே அகராதி என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. நூல் நிகண்டு என்றே அழைக்கப்பட்டது. எனினும் அகராதி என்ற சொல் இவ்வகை நூல்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாக இருந்தது. காலப் போக்கில் அகராதி என்ற பெயரே இந் நூல்வகைக்குரிய பெயராக நிலைத்துவிட்டது. முறையான அகராதி முன்னர் குறிப்பிட்டபடி, பெஸ்கியால் 1792 ல் வெளியிடப்பட்டது.
[தொகு] தமிழ் அகராதியின் வளர்ச்சி
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
இணையத்தில் காணக் கிடைக்கும் பயனுள்ள தமிழ் அகரமுதலிகள் சில: