Wikipedia:தமிழ் தட்டச்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கிபீடியா, ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
[தொகு] தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள்
- எ-கலப்பை என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். மேலும் அறிய எ-கலப்பை கட்டுரையைப் பார்க்க.
- தமிழ்விசை என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, எ-கலப்பை நிறுவ இயலாத லினக்ஸ் இயங்குதளங்களில், பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்99 விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்ச உதவுவது; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.
[தொகு] தமிழ்த் தட்டச்சுக்கு பிற வழிகள்
- முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா அல்லது இளங்கோ.நெட் எழுதிகளை பயன்படுத்தலாம். அங்கு தட்ட்ச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம். சுரதா எழுதியை பதிவிறக்கிவைத்தும் (offline copy) பயன்படுத்த முடியும். ஆனால் திருவாளர் சுரதாவிடம் முன்னனுமதி பெற்றுக்கொள்ளவும் (suratha@கொட்மெயில்.கொம்).
- இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
- தமிழ் பயர் பாக்ஸ் உலாவியப் பயன்படுத்தி ஒருங்குறியில் தமிழை நேடியாகத் தட்டச்சு செய்யலாம். தமிழ் பயர்பாக்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது ஆங்கில ஒலியியல் மற்றும் தமிழ் நெட் 99 விசைப்பலகைகளை ஆதரிக்கின்றது.
- தமி்ல் உனிகொடு எடிடர் இனையத்தில் லேயே சுலபமாக தமி்ழ் அடிக்கலாம்
[தொகு] வெளியிணைப்புக்கள்
- Voice on Wingsன் விரிவான தமிழ்த் தட்டச்சுக் கையேடு.
- தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க - மயூரேசனின் வலைப்பதிவு (தமிழில்)}.
- தமிழில் தட்டச்சிட வாருங்கள் - மயூரேசனின் வலைப்பதிவு (தமிழில்)}.
- ஒலிபெயர்ப்பு முறையில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? நா.கண்ணன், அண்ணாகண்ணன்
- கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்ள...