தீ நுண்மம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உயிரினங்களில் நோய் உண்டாக்கும் சிறு துகள்களை தீ நுண்மம் (Virus) என்று அழைக்கிறோம். தீ நுண்மங்கள் கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல சிற்றுறுப்புகளும் கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் இன்னொரு உயிரினத்தின் கலங்களைத் தாக்கி அவற்றைத் தம் கட்டுக்குள் கொண்டு வந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரஸ் என்ற சொல் யூக்கார்யோட்டுகளைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். ப்ரோக்கார்யோட்டுகளைத் தாக்கும் துகள்களை கோலுரு நுண்ணுயிர் திண்ணி என்று அழைக்கிறோம்.
[தொகு] அருஞ்சொற்பொருள்
- கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி - Obligate intracellular parasite
- கோலுரு நுண்ணுயிர் திண்ணி - Bacteriophage