நுண்ணுயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மனிதக் கண்களுக்கு புலப்படாத, நுண்ணோக்கிகளைக் கொண்டு மட்டுமே காண வல்ல உயிரினங்களை நுண்ணுயிர்கள் (Microorganisms) என்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். நுண்ணுயிர்கள் பற்றி ஆராயும் அறிவியல் துறை நுண்ணுயிரியல் ஆகும்.
[தொகு] நுண்ணுயிர்களின் அளவு
நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது செல் மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பலத் செல்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் ப்ரோடிஸ்டுகள் போன்ற ஒரு செல் உயிரினங்களும் உண்டு.
[தொகு] நுண்ணுயிர்களின் வாழிடம்
கடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீர் ஊற்றுகள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத் தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.
[தொகு] நுண்ணுயிர்களின் பயன்பாடுகள்
வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. மனிதர்கள், விலங்குகள், தவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு.