நெடுங்குழு (தனிம அட்டவணை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெடுங்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய பெயர்களை பிறைக்குறிகளுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நெடுங்குழு 1 (IA,IA): காரவுப்பு (ஆல்க்கலி) மாழைகள் அல்லது ஹைட்ரஜன் லித்தியம் நெடுங்குழு
- நெடுங்குழு 2 (IIA,IIA): காரவுப்பு (ஆல்க்கலி) குறையடர்த்தி மாழைகள் அல்லது ஹீலியம்-பெரிலியம் நெடுங்குழு
- நெடுங்குழு 3 (IIIA,IIIB): ஸ்காண்டியம் நெடுங்குழு
- நெடுங்குழு 4 (IVA,IVB): டைட்டேனியம் நெடுங்குழு
- நெடுங்குழு 5 (VA,VB): வனேடியம் நெடுங்குழு
- நெடுங்குழு 6 (VIA,VIB): குரோமியம் நெடுங்குழு
- நெடுங்குழு 7 (VIIA,VIIB): மாங்கனீசு (நெடுங்) குழு
- நெடுங்குழு 8 (VIII): இரும்பு (நெடுங்) குழு
- நெடுங்குழு 9 (VIII): கோபால்ட்டு (நெடுங்) குழு
- நெடுங்குழு 10 (VIII): நிக்கல் (நெடுங்) குழு
- நெடுங்குழு 11 (IB,IB): செப்பு (நெடுங்) குழு
- நெடுங்குழு 12 (IIB,IIB): துத்தநாக (நெடுங்) குழு
- நெடுங்குழு 13 (IIIB,IIIA): போரான் (நெடுங்) குழு
- நெடுங்குழு 14 (IVB,IVA): கரிமம் (நெடுங்) குழு
- நெடுங்குழு 15 (VB,VA): நைட்ரஜன் (நெடுங்) குழு
- நெடுங்குழு 16 (VIB,VIA): ஆக்ஸிஜன் (நெடுங்) குழு/உயிர்வளிக்குழு
- நெடுங்குழு 17 (VIIB,VIIA):ஃவுளூரின் (நெடுங்) குழு / ஹாலஜன் குழு
- நெடுங்குழு 18 (Group 0): ஹீலியம்-நியான் (நெடுங்) குழு/ நிறைவுடை வளிமக் குழு