போரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||
பொது | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
போரான், B, 5 | ||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
metalloids | ||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, இடம் |
13, 2, p | ||||||||||||||
தோற்றம் | கருப்பு/பழுப்பு |
||||||||||||||
அணு திணிவு | 10.811(7) g/mol | ||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
1s2 2s2 2p1 | ||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 3 | ||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||
இயல் நிலை | solid | ||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 2.34 கி/செ.மி³ | ||||||||||||||
உருகு நிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
2.08 g/cm³ | ||||||||||||||
உருகு வெப்பநிலை |
2349 K (2076 °C, 3769 °F) |
||||||||||||||
கொதி நிலை | 4200 K (3927 °C, 7101 °F) |
||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
50.2 கி.ஜூ/மோல்(kJ/mol) | ||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
480 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) 11.087 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||
|
|||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||
படிக அமைப்பு | rhombohedral | ||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
3 (mildly acidic oxide) |
||||||||||||||
Electronegativity | 2.04 (Pauling scale) | ||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 800.6 kJ/(mol | ||||||||||||||
2nd: 2427.1 kJ/mol | |||||||||||||||
3rd: 3659.7 kJ/mol | |||||||||||||||
அணு ஆரம் | 85 pm | ||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
87 pm | ||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 82 pm | ||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||
காந்த வகை | nonmagnetic | ||||||||||||||
மின் தடைமை | (20 °C) 1.5×104 Ω·m | ||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 27.4 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 5–7 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) |
(20 °C) 16200 மீ/நொடி | ||||||||||||||
Bulk modulus | (β form) 185 GPa | ||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | 9.3 | ||||||||||||||
விக்கர் உறுதிஎண் Vickers hardness |
49000 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||
CAS பதிவெண் | 7440-42-8 | ||||||||||||||
மேற்கோள்கள் |
போரான்(Boron) என்னும் தனிமம் கருப்பாக அல்லது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வேதியல் பொருள். இதை பெரும்பாலும் போராக்சு (Borax) என்னும் கனிமத்தில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் அதிக அளவில் அகழ்ந்தெடுத்து பிரிக்கிறார்கள். இத் தனிமத்தின் அணு எண் ஐந்து. இதன் அணுக்கருவில் 5 நேர்மின்னிகளும், அணுக்கருவைச்சுற்றி ஐந்து எதிர்மின்னிகளையும் சுழன்று வருகின்றன. இந்த ஐந்து எதிர்மின்னிகளில், இரண்டு உள் சுற்றுப்பாதையில் சுழன்று வருகின்றன. எஞ்சி உள்ள மூன்று எதிர்மின்னிகளும் வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும் திறம் கொண்டவை. போரான் தனிமம் பல வடிவங்கள் கொண்டுள்ளது. படிகமாகவும், படிகமல்லாமலும் திண்ம வடிவம் கொண்டுள்ளது. படிக வடிவிலும் பல்வேறு படிக உருவங்களில் இது இருக்கின்றது. போரான் நைட்டிரைடு என்னும் பொருள் மிகவும் உறுதியானது. ஏறத்தாழ வைரம் போலும் உறுதியானது. போரான் சிலிக்கான் சில்லு உற்பத்தியில் சிறப்பான பங்கு கொள்ளுகின்றது. இருமுனையம், திரிதடையம் போன்ற நுண் மின்கருவிகள் செய்யப் பயன் படும் குறைக்கடத்தி சிலிக்கானை பி-வகை (புரைமின்னி அதிகம் உள்ளது) குறிக்கடத்தியாக மாற்ற போரான் அணுக்கள் சிலிக்கனுக்குள் தேவைப்படும் அளவு புகுத்தப்படுகின்றன.