கரிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||
பொது | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
கரிமம், C, 6 | ||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
மாழைஅல்லாதன (உலோகம் அல்லாதன) |
||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, இடம் |
14, 2, p | ||||||||||||||
தோற்றம் | கருப்பு (கரி, கிராஃவைட்டு) நிறமிலி (வைரம்) |
||||||||||||||
அணு திணிவு | 12.0107(8) g/mol | ||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
1s2 2s2 2p2 | ||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 4 | ||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | (கரி, கிராஃவைட்டு) 2.267 கி/செ.மி³ | ||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | (வைரம்) 3.513 கி/செ.மி³ | ||||||||||||||
உருகு வெப்பநிலை |
? முப்புள்ளி, ca. 10 MPa and (4300–4700) K (4027–4427 °C, 7280–8000 °F) |
||||||||||||||
கொதி நிலை | ? பொசுங்குதல் ca. 4000 K (3727 °C, 6740 °F) |
||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
(கரி, கிராஃவைட்டு) ? 100 கி.ஜூ/மோல்(kJ/mol) | ||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
(வைரம்) ? 120 கி.ஜூ/மோல்(kJ/mol) | ||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
? 355.8 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) (கரி,கிராஃவைட்டு) 8.517 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) (வைரம்) 6.115 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||
|
|||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
4, 2 (சிறிதளவு காடிய ஆக்ஸைடு) |
||||||||||||||
Electronegativity | 2.55 (Pauling scale) | ||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 1086.5 kJ/(mol | ||||||||||||||
2nd: 2352.6 kJ/mol | |||||||||||||||
3rd: 4620.5 kJ/mol | |||||||||||||||
அணு ஆரம் | 70 pm | ||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
67 pm | ||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 77 pm | ||||||||||||||
வான் டெர் வால் ஆரம் |
170 பி.மீ (pm) | ||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||
காந்த வகை | diamagnetic | ||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) (graphite) (119–165) வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) (diamond) (900–2320) வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
வெப்ப விரவுமை | (300 K) (diamond) (503–1300) mm²/s |
||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | (கரி, கிராஃவைட்டு) 0.5 | ||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | (வைரம்) 10.0 | ||||||||||||||
CAS பதிவெண் | 7440-44-0 | ||||||||||||||
மேற்கோள்கள் |
கரிமம் (கார்பன், Carbon, வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள். விலையுயர்ந்த வைர கற்களும் கரிமம்தான், எரிப்பதற்குப் பயன்படுத்தும் கரியும் கரிமம்தான். 1985 ஆம் ஆண்டு பந்து போன்ற ஒரு கூண்டு வடிவில் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு பெரு விந்தையான வடிவிலும் கரிமம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பக்மினிஸ்டர் ஃவுல்லரீன் என்று பெயர் (சுருக்கமாக பக்கிப் பந்து என்றும் அழைப்பர்). எனவே கரிமம் பல மாற்றுவடிவங்களில் இருப்பதை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கரிமம் உயிர்வாழ்வன எல்லாவற்றிலும் (மரஞ்செடிகொடிகள், புழு பூச்சிகள் எல்லாம்) உள்ள ஒரு பொருளாகும். இப்படிப் பரவலாக இருந்த பொழுதிலும் நில உலகில் 0.03% மட்டுமே கரிம அணுக்களால் ஆனது. 1 மில்லியனுக்கும் அதிகமான வெவ்வேறு கரிமங்களினால் ஆன மூலக்கூறுகளை வேதியியல் துறையினர் அறிவர். நாம் மூச்சு வெளிவிடும் பொழுது அதில் கார்பன்-டை-ஆக்ஸைடு என்னும் வளிமம் உள்ளது. இது ஒரு கரிம அணு இரு ஆக்ஸிஜன் அணுக்களுடன் சேர்ந்த ஒரு மூலக்கூறு (CO2 ). கரிம அணுக்கள் ஃஐடிரசன் (hydrogen) அணுக்களுடன் வெவ்வேறு விகிதத்தில் இணைந்து கரிம-நீரதை (ஹைடிரோ-கார்பன்) கூட்டனுப் பொருட்கள் உண்டாக்குகின்றன. இவை எரிபொருளாக பயன்பட்டு நமக்கு பல வடிவங்களில் ஆற்றல் தருகின்றது.
கரிமத்தின் அணு எண் 6. எனவே இதனுள் ஆறு நேர்மின்னியும் (புரோட்டானும்), ஆறு எதிர்மின்னியும் (மின்னணு, எலக்ட்ரான்) உள்ளன. இதன் அணு எடை 12. அணுக்கருவுள், 6 நொதுமின்னியும் (நியூட்ரான்) உண்டு. கரிமம் தன் கெட்டியான திண்ம நிலையில் இருந்து உருகுவதில்லை, ஆனால் 3500 C வெப்ப நிலையில், நேரடியாய் வளிம நிலையை அடைகின்றது. இவ்வகையாக உருகாமல் நேரடியாய் வளிமமாக மாறுவதற்கு பொசுங்குதல் என்று பெயர். கரிமத்தின் அடர்த்தி 2.25 கி/கன செ.மீ. C-14 என்பது இக்கரிம அணுவின் ஐசோடோப் (அணுவெண் மாறாமல், அணுவெடை மட்டும் மாறி உள்ள வடிவம்).