பிட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டமாகும். இது அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பூ என அழைக்கப்படும் தேங்காய்த் துருவல் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இவ்வுணவுப் பண்டம் தமிழ் நாட்டில் அதிகமாகத் தயாரிக்கப்படுவது இல்லையாயினும், இலங்கை, கேரளா ஆகிய பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு விரும்பி உண்ணும் உணவுப் பொருள்களில் பிட்டு ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- தமிழர் உணவு வகைகள்