பில் கேட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பில் கேட்ஸ் (ஒக்டோபர் 28, 1955) இவர் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும்(CSA),பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்(CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்ப டிஉலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுபகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்தது.
[தொகு] வாழ்க்கை
[தொகு] இளமை
பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு 1973ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிகு தேவாயான மென்பொருள்களை எழுத ஆனார்கள். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தாரலானது. இவருடைய தலைமயில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.