பென்சீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பென்சீன் என்பது ஆறு கரிம அணுக்கள் ஒரு வளையம் போல் சேர்ந்திருக்கும் ஒரு கரிமவேதியியல் சேர்வையாகும். இதன் வேதியியல் குறியீடு C6H6. இது சுருக்கமாக Ph-H எனவும் குறிக்கப்படுவதுண்டு. பென்சீன், ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மம் (திரவம்). ஒப்பீட்டளவில் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டது. இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டதால், எரிபொருட்களில் இவற்றைச் சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொழில்துறையில் ஒரு முக்கியமான கரைப்பானாகப் பயன்படுவதுடன், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், செயற்கை இறப்பர், மற்றும் சாயப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணிப் பொருளாகவும் உள்ளது. பென்சீன், கச்சா எண்ணெயில் ஒரு சேர்பொருளாக உள்ளது. ஆனாலும், இது பெற்றோலியப் பொருட்களில் இருக்கும் வேறு சேர்வைகளிலிருந்து செயற்கையாக ஆக்கப்படுகின்றது.